துரந்தர் 2 படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? ரூ.1000 கோடி வசூலை நெருங்கப்போகுதாம்?
ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'துரந்தர் 2' திரைப்படத்தின் 4 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
துரந்தர் 1: ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத் உட்பட பலர் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பான் இந்தியா படமாக வெளிவந்த திரைப்படம் 'துரந்தர்'. பாகிஸ்தான் பயங்கரவாதம் அதனால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகளை கூறும் படமாக வெளிவந்தது. இந்திய உளவாளி ரன்வீர் சிங் பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல்களுடன் இணைந்து என்னென்ன செய்கிறார் என்பதே படம்.
துரந்தர் 1 வசூல்: உலகளவில் ரிலீசான துரந்தர் முதல் பாகம் இந்தியளவில் ரூ.700 கோடியும், உலகளவில் ரூ.1,350 கோடியும் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. முதல் பாகத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் சமீபத்தில் ரிலீஸானது.
எதிர்பார்ப்பு: துரந்தர் முதல் பாகம் மெர்சலாக இருந்ததை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்படி இருக்குமோ? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகம் இருந்தது. அதன்படி சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ரம்ஜான் தொடர் விடுமுறையை ஒட்டி துரந்தர் 2 ரிலீசானது.
வரவேற்பு: பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 19ம் தேதி உலகம் முழுவதும் துரந்தர் 2 ரிலீசானது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீசானது. முதல் ஷோவில் இருந்து ரசிகர்களை கூட்டத்தை ஈர்க்க தொடங்கியது. ஒவ்வொரு ஷோவும் ஹவுஸ்ஃபுல் எனவும் கூறுகின்றனர்.
தீவிரவாதம்: முதல் பாகம் பாகிஸ்தான் தீவிரவாதத்தை மேலோட்டமாக கூறிய நிலையில் இரண்டாம் பாகம் பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் நிகழ்கால விஷயங்களை விரிவாக கூறும் படமாக வெளியானது. அதேபோல் படத்தின் மொத்த டைமிங் 4 மணிநேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை கதை: முதல் பாகத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இருந்து இரண்டாம் பாகம் தொடர்கிறது. உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளதால் படம் முழுக்க பல ரெபரன்ஸ் காட்சிகள் நிறைந்துள்ளதாம். ஆகமொத்தம் துரந்தர் 2 திரைப்படம் தொடர்ந்து சினிமா ரசிகர்களை காந்தம் போல் ஈர்த்து வருகிறது.
வசூல் என்ன? துரந்தர் 2 ரிலீசான முதல் நாளே ரூ.100 கோடியை கடந்து சாதனை படைத்தது. தொடர்ந்து வெற்றிநடைபோடும் இப்படம், 4 நாட்களில் உலகளவில் ரூ.761 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வரும் வாரங்களில் இதே வசூல் இருந்தால் முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடித்து ரூ.1500 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications