மாநில முதல்வர்களின் ஒரு நாள் ஷெட்யூல் எப்படி இருக்கும் தெரியுமா? காலை தொடங்கி மாலை வரை வொர்க் ரொட்டீன் எப்படி இருக்கும்?
மாநில முதல்வர்களின் ஒரு நாள் வேலை எப்படி இருக்கும்? என்பதை பற்றி தெரிந்துகொள்ள பலருக்கும் ஆர்வம் அதிகம் இருக்கும். அப்படி என்ன பண்ணுவாங்க? என்ற கேள்வி சாமானியர்களுக்கு உண்டு. கோடிக்கணக்கான மக்களின் பாதுகாப்பு உட்பட பல பொறுப்புகளை சுமந்து இருப்பதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் தலையாய கடமை ஆகும். மற்ற அரசு ஊழியர்களை போல் 10-5 வேலை என்று இல்லாமல் 24 மணிநேரமும் விழிப்புடன் இருக்கவேண்டிய பதவியாகவும். கல்வி, மாநிலத்தின் பாதுகாப்பு, தொழில்வளர்ச்சி இப்படி ஒவ்வொரு துரையின் மீதும் கவனம் செலுத்தவேண்டும். அதனுடன் முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளுதல், அரசு நிகழ்ச்சி, பிற மாநிலங்களுக்கு பயணித்தல் என அனைத்தையும் கவனிக்கவேண்டும். இப்படியாக மலைபோல் பொறுப்புகள் இருக்கும் நிலையில் முதல்வர்களின் ஒரு நாள் ஷெட்யூல் எப்படி இருக்கும்? காலை முதல் மாலை வரை என்ன செய்வார்கள் என்பதை பற்றி வாங்க இந்த பதிவில் பார்ப்போம்.
அதிகாலை: காலை எழுந்தவுடன் முதல்வர்களின் முதல் வேலை உடற்பயிற்சி செய்வது. சுறுசுறுப்பாக அந்த நாளை தொடங்கவும், சோர்வின்றி வேலை செய்யவும் காலை உடற்பயிற்சி மிக அவசியம். ஜிம்முக்கு சென்றே ஆகவேண்டும் என்றில்லாமல் நடைபயிற்சியாவது செய்து தங்களின் நாளை சுறுசுறுப்புடன் தொடங்குகின்றனர்.
10 AM: காலை உடற்பயிற்சிக்கு பின் பிரேக்ஃபாஸ்ட் முடித்துவிட்டு காலை 10 மணி அளவில் அலுவலகர்த்திக்கு செல்கின்றனர். சில முதல்வர்கள் முன்கூட்டியே செல்வது வழக்கம். ஷெட்யூல் பொறுத்து இந்த டைமிங் மாறுபடும்.
10.30AM: உயர்நிலை அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டங்கள், அமைச்சர்கள் சந்திப்பு, முக்கிய ஆவணங்களில் கையெழுத்து போடுவது, வளர்ச்சி திட்டங்களை நேரில் பார்வையிடுதல் போன்ற வேலைகளில் முதலமைச்சர்கள் ஈடுபடுவர்.
1.30-2.30 PM: பலதரப்பட்ட வேலைகளுக்கு இடையே மதியம் ஒரு மணிநேரம் உணவு இடைவேளை. இந்த டைமிங் சில நேரங்களில் மாறுபடலாம். முக்கிய நிகழ்வுகளில் ஏதேனும் கலந்துகொண்டால் இந்த டைமிங் மாறுபடும். இந்த நேரத்தில் தான் பெரும்பாலான முதல்வர்கள் தங்களின் மதிய உணவை எடுத்துக்கொள்வர்.
2.30-4.30 PM: உணவு இடைவேளைக்கு பின் ஐஏஎஸ் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் மீட்டிங் இருக்கும், அமைச்சர்களின் செயலாளர்களுடன் மீட்டிங் இருக்கும். அதேபோல் முக்கிய கட்சி பிரமுகர்கள் சந்திப்பு, பொதுமக்கள் சந்திப்பு ஆகிய நிகழ்வுகள் நடக்கும்.
மாலை 5 PM: மாலையில் பேப்பர் வொர்க் பார்ப்பது முதல்வர்களின் வழக்கம். அதாவது பொதுமக்களின் மனுக்கள், கோப்புகள் போன்றவற்றை சரிபார்க்கும் நேரமாக மாலைவேளை இருக்கும். அதன்பின்னர் வேலை முடிந்தது ரெஸ்ட் எடுக்க சென்றுவிடுவார்கள் என்று எண்ணிவிடாதீர்கள். அலுவலகத்தை விட்டு வீட்டுக்கு சென்றாலும் முதல்வரின் வேலை தொடரும். மாநிலத்தின் எந்த முலையில் எதாவது பெரிய அசம்பாவிதம் நடந்துவிட்டால் எந்த நேரமானாலும் முதல்வர் உடனே சம்பவ இடத்திற்கு செல்லவேண்டும். இல்லையெனில் நார்மல் நாளாக இருந்தால் இரவு 10-11 மணியளவில் தூங்க சென்று விடுவார்கள். இப்படியாக மாநில முதல்வர்களின் ஒரு நாள் ஷெட்யூல் இருக்கும். நாம் நினைத்தது போல் அவ்வளவு ஈஸி இல்லை மக்களே.


Click it and Unblock the Notifications