Home / Photos
ஆறாவது பெருங்கடல் பற்றி கேள்விப்பட்டுருக்கீங்களா.. இதுவரை யாரும் போனதில்லையாம்.. யாராலயும் போக முடியாதாம்? ஏன் தெரியுமா? ஆச்சரியம்!
By Chandru
நம் பூமியில் உள்ள ஐந்து பெருங்கடலை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் ஆராச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆறாவது பெருங்கடல் பற்றி தெரியுமா? எங்கே உள்ளது? எப்படி செல்வது? என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Share
அட்லாண்டிக், பசிபிக், இந்திய, ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் என ஐந்து பெருங்கடல்கள் பூமியில் உள்ளன. இவைகளை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். இவை அனைத்தும் ஒவ்வொரு நாட்டின் எல்லையாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாட்டினரும் அதற்கு சொந்தம் கொண்டாடியும் வருகின்றனர்.
2/5
Share
விண்வெளியில் எத்தனையோ ஆராய்ச்சி, எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டிருந்தாலும் இதில் பாதியளவு கூட கடலின் ஆழத்தில் ஆராய்ச்சி செய்யவோ கண்டுபிடிக்கவோ ஆராய்ச்சியாளர்களால் முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். இன்றும் கடலின் அடி ஆழம் மர்மமாகவே இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் ஆராய்ச்சியாளர்கள் புதிதாக ஆறாவது பெருங்கடல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
3/5
Share
இப்படியாக புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கடலை எங்கு பார்க்கலாம்? என்ற ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் இங்கு தான் ட்விஸ்ட்டே உள்ளது. இந்த பெருங்கடல் பூமிக்கு மேல் இல்லை பூமிக்கு கீழ் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
4/5
Share
ஆதாவது இந்த பெருங்கடல் பூமிக்கு மேற்பரப்பில் இருந்து சுமார் 700 கிலோமீட்டர் அடி ஆழத்தில் மிக பெரிய பாறையின் அடியில் அமைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கடலின் மேற்பரப்பு முழுவதும் நீல நிற பாறையினால் மறைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
5/5
Share
500க்கும் மேற்பட்ட நிலநடுக்கம், 2 ஆயிரத்துக்கும் அதிகமான நில அதிர்வுகள் என ஏகப்பட்ட ஆய்வுகளை செய்து ஆறாவது பெருங்கடலை கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இதில் இன்னும் நேரிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications