Home / Photos
உலகளவில் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட நகரங்கள் பற்றி தெரியுமா? ஆச்சரியங்களும்!அதிசயங்களும்!
By Chandru
அதிசயங்கள் நிறைந்தவையாக உள்ளது நம் பூமி.. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் மக்கள் விட்டுச்சென்ற பல மர்மங்கள் இன்றும் நம் கண்முன் உள்ளது.. வியக்கவைக்கும் அத்தியாசங்கள் நிறைந்தாகவும் உள்ளது. அப்படியாக பழமையான நகரங்கள், கட்டிடங்கள் பல கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை எப்படி கடலுக்குள் சென்றன? அப்படியான இடங்கள் என்னன்ன? என்பதன் சுவாரசியமான தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.
1/8
Photo Credit: Wikipedia
Share
துவாரகா: குஜராத் கடற்கரை பகுதியில் கடலுக்கு அடியில் இந்த பழமையான துவாரகா நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இன்றும் அந்த நகரத்தின் பக்கிதியை கடலுக்குள் பார்க்கலாம். அதேபோல் 3,500 ஆண்டுகள் முதல் 9000 ஆண்டுகள் பழமையான நகரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
2/8
Photo Credit: Wikipedia
Share
ஹெராக்லியான்: எகிப்து நாட்டின் கடலுக்கு அடியில் மூழ்கிய இந்த பழமையான நகரம் தொல்லியல் ஆராச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.மு 8ம் நூற்றாண்டு உருவான நகரமாக கருதப்படுகிறது. சுமார் 3000 ஆண்டுகள் பழமையான இந்த நகரம் எகிப்து கடலுக்குள் கண்டறியப்பட்டது.
3/8
Photo Credit: archaeology wikipedia
Share
பாவ்லோபெட்ரி: கெராக்க நாட்டின் கடலுக்கு அடியில் மூழ்கிய நகரம் பாவ்லோபெட்ரி. 5000 ஆண்டுகள் பழமையான இந்த நகரம், நிலநடுக்கங்கள் மற்றும் புவித்தட்டு நகர்வு காரணத்தால் கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படுகிறது.
4/8
Photo Credit: Wikipedia
Share
பைஜி: சீனா கடல் பகுதியில் மூழ்கிய பழமையான நகரம் பைஜி. 3000 ஆண்டுகள் பழமையான இந்த நகரத்தின் கட்டிடங்களை இன்றும் நாம் சீனாவில் காணலாம்.
5/8
Photo Credit: Wikipedia
Share
யோனகினி நினைவுச்சின்னம்: ஜப்பான் கடல்பகுதியில் நீருக்குள் மூழ்கிய பழமையான நகரம் யோனகினி. 2000-10,000 ஆண்டுகள் பழமையான இந்த நகரம் நிலநடுக்கங்கள் காரணமாக கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படுகிறது.
6/8
Photo Credit: Wikipedia
Share
ராயல் ஃபோர்ட்: ஜமைக்காவில் கடலுக்குள் மூழ்கிய நகரம் ராயல் ஃபோர்ட். தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் காரணமாக இந்த நகரம் கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இன்றும் கடலின் அடியில் இந்த நகரின் கட்டிடங்களை காணலாம்.
7/8
Photo Credit: Wikipedia
Share
கிளியோபட்றா: எகிப்தின் கடல்பகுதியில் கிளியோபட்றாவின் அரண்மனை, சிலைகள் நீருக்குள் முழ்கியுள்ளதை தொல்லியல் ஆராச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
8/8
Photo Credit: Wikipedia
Share
அட்லிட் யாம்: இஸ்ரேல் கடற்கரையில் அட்லிட் யாம் என்ற பழமையான நகரம் கடலுக்குள் மூழ்கியுள்ளது. மூழ்கிய நகரத்தின் வீடுகள், கட்டடங்கள் என பல அதிசயங்களை இன்றும் நாம் கடலுக்குள் நாம் காணலாம்.



Click it and Unblock the Notifications