லட்சத்தில் செலவு.. கோடியில் வசூல்! தயாரிப்பாளர்களையே ஆச்சரியப்படுத்திய தெலுங்கு படங்கள்!
குறைந்த செலவில் உருவாகி, கோடிகளில் வசூல் குவித்து தயாரிப்பாளர்களையே ஆச்சரியப்படுத்திய படங்களின் லிஸ்ட்டை இந்த பதிவில் பார்க்கலாம்.
Pelli Choopulu: வாழ்க்கையில் எந்த இலக்கும் இல்லாமல் இருக்கும் பிரசாத், தொழில் தொடங்கும் கனவுடன் இருக்கும் சித்ராவை சந்தித்த பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே கதைக்களம். சுமார் ₹60 லட்சம் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் ₹30 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
Agent Sai Srinivasa Athreya: சிறிய துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வரும் சாய் ஸ்ரீனிவாச அத்ரேயா, ஒரு சாதாரண வழக்கை விசாரிக்கச் செல்லும்போது எதிர்பாராத குற்றச் சதியில் சிக்கிக் கொள்கிறார். அந்த மர்மத்தின் பின்னணியை கண்டுபிடிக்கும் அவரது பயணமே படத்தின் கதைக்களம். சுமார் ₹2 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் ₹20 கோடிக்கும் மேல் வசூலித்து வணிகரீதியாக வெற்றி பெற்றது.
Balagam: ஒரு வயதான குடும்பத் தலைவரின் மரணத்திற்குப் பிறகு, அவரது குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களும், பிரிந்திருந்த உறவுகள் மீண்டும் ஒன்றிணைவதும் தான் படத்தின் மையக்கதை. சுமார் ₹2 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் ₹25 கோடிக்கும் மேல் வசூலித்து தயாரிப்பாளர்களுக்கு பல மடங்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்தது.
C/o Kancharapalem: வயது, மதம், சமூக பின்னணி என பல வேறுபாடுகளைக் கொண்ட நான்கு காதல் கதைகளை யதார்த்தமாகச் சொல்லும் திரைப்படம். சுமார் ₹45 லட்சம் பட்ஜெட்டில் உருவான இப்படம், ₹7 கோடி வசூலித்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று தெலுங்கு சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக மாறியது.
Cinema Bandi: ஒரு கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு எதிர்பாராத விதமாக ஒரு விலையுயர்ந்த கேமரா கிடைக்கிறது. அதை வைத்து நண்பர்களுடன் சேர்ந்து திரைப்படம் எடுக்க முயற்சிப்பதே படத்தின் கதைக்களம். சுமார் ₹70 லட்சம் பட்ஜெட்டில் உருவான இப்படம், ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் உலகளவில் பேசப்பட்ட தெலுங்கு படங்களில் ஒன்றாக மாறியது


Click it and Unblock the Notifications