Home / Photos
அடேங்கப்பா இத்தனை கோடியா? அதிக பொருட்செலவில் உருவான இந்திய படங்கள்..
By Divya Bala
பிரம்மாண்டங்களை மக்களுக்கு கொடுப்பதற்காகவே இயக்குனர்கள் படங்களை அதிக பொருட்செலவில் தத்துரூபமான செட் அமைத்து படமாக எடுத்துள்ளார்கள். இந்த படங்களுக்கு எத்தனை கொடிகள் செலவு செய்துள்ளார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1/9
Photo Credit: IMDb
Share
கல்கி 2898 AD: நாக் அஸ்வின் இயக்கத்தில் முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான இந்த படம் 600 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வசூல் 1230 கோடியாகும்.
2/9
Photo Credit: IMDb
Share
எந்திரன் 2.0: பிரம்மாண்டத்திற்கு புகழ்பெற்ற இயக்குனரான சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். 570 கோடி செலவில் இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். இந்த படம் 800 கோடி வரை வசூலை பெற்றுள்ளது.
3/9
Photo Credit: IMDb
Share
ஆர்ஆர்ஆர்: ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இந்த படம் 336 கோடியில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. பல விருதுகளை அள்ளிய இந்த படம் 1300கோடி வசூல் சாதனையை படைத்தது.
4/9
Photo Credit: IMDb
Share
ஆதிபுருஷ்: ஓம் ராவ்ட் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு கிட்டத்தட்ட 500 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளார்கள். ஆனால் இந்த படம் ரசிகர்களை குஷி படுத்த தவறியதால் 450 கோடிக்கும் குறைவாகவே வசூலை பெற்றுள்ளது.
5/9
Photo Credit: IMDb
Share
பொன்னியின் செல்வன் 1: வரலாற்றில் முக்கியமான ஒரு கதையை மையமாக வைத்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இந்த படம் 500 கோடியில் உருவாகியுள்ளது. கதையில் சில மாற்றங்கள் இருந்ததால் சில ரசிகர்களை கவர முடியவில்லை. இந்த படத்தில் போட்ட காசை வசூலாக எடுத்துள்ளார்கள்
6/9
Photo Credit: IMDb
Share
பிராம்ஸ்ட்ரா 1: பல மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான இந்த படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இந்த படம் 410 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வசூலும் போட்ட காசை எடுத்து போலவே கிடைத்துள்ளது.
7/9
Photo Credit: IMDb
Share
கோட்: சமீபத்தில் திரையில் வெளியான இந்த படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் 380 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் வசூல் 450 கோடிகள் ஆகும்.
8/9
Photo Credit: IMDb
Share
சகோ: பிரபாஸ் நடிப்பில் சுஜித் இயக்கத்தில் 350 கோடியில் உருவான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதன் வசூல் 439 கோடிகளில் அடங்கிவிட்டது.
9/9
Photo Credit: IMDb
Share
ராதே ஷியாம்: காதல் திரைப்படம் ஆன இதை ராதா கிருஷ்ணகுமார் இயக்க பிரபாஸ் நடித்துள்ளார். இந்த படத்தை 350 கோடி செலவில் படமாக்கியுள்ளர்கள். ஆனால் இந்த படம் 200 கோடி வசூலை கூட எட்டவில்லை.


Click it and Unblock the Notifications