Home / Photos
விஜே-வை காதலிக்கும் கெத்து தினேஷ்.. யார் அவர்? லவ் ஸ்டோரி தெரியுமா?
By Chandru
நடிகர் அட்டக்கத்தி தினேஷ் தொகுப்பாளினி ஒருவரை நீண்ட நாள் காதலித்து வருகிறார். யார் அவர்? இவர்களின் காதல் கதை என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Photo Credit: instagram@V R Dinesh
Share
பா. ரஞ்சித் இயக்கத்தில் 2021இல் வெளிவந்த 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் நாயகியாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் தினேஷ். அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.
2/7
Photo Credit: instagram@V R Dinesh
Share
அட்டக்கத்தி வெற்றியை தொடர்ந்து தினேஷின் பெயருக்கு முன் 'அட்டக்கத்தி' அடைமொழியாக சேர்க்கப்பட்டது. அன்றுமுதல் அட்டக்கத்தி தினேஷ் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து வெவ்வேறு ஹிட் படங்கள் கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
3/7
Photo Credit: instagram@V R Dinesh
Share
குக்கூ, விசாரணை, கபாலி, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, லப்பர் பந்து ஆகிய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். குறிப்பாக 'லப்பர் பந்து' படத்தில் தினேஷின் 'கெத்து' கதாபாத்திரம் இவருக்கு புது அடையாளத்தை உருவாக்கி கொடுத்தது. அட்டக்கத்தி தினேஷ் தற்போது கெத்து தினேஷாக தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டார்.
4/7
Photo Credit: instagram@V R Dinesh
Share
பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டுவம்' படத்தில் நாயகனாக கெத்து தினேஷ் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து 'பந்தா கேங்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது தினேஷின் காதல் வாழ்க்கை வெளிவந்துள்ளது.
5/7
Photo Credit: instagram@V R Dinesh
Share
நீண்ட நாள் ரகசிய காதல் தற்போது வெளிவந்துள்ளது. விஜே எழிலரசியை நீண்ட நாள் காதலித்து வருகிறார் தினேஷ். தற்போது இருவரும் சேர்ந்திருக்கும் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது.
6/7
Photo Credit: instagram@V R Dinesh
Share
காதலரான தினேஷின் பிறந்தநாளை விஜே எழிலரசி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் அந்த நட்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறியது. ஆனால் இவர்களின் காதல் வாழ்க்கை மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.
7/7
Photo Credit: instagram@V R Dinesh
Share
இந்த நிலையில் தற்போது கெத்து தினேஷ்-விஜே எழிலரசி இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடும் கியூட் புகைப்படங்கள் சில சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications