Home / Photos
இந்தியாவில் மட்டுமல்ல.. தீபாவளி கொண்டாடும் பிற நாடுகள் என்னென்ன தெரியுமா?
By Chandru
தீமை விலகி நன்மை பிறக்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வரும் நவம்பர் 8ம் தேதி உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. பட்டாசு, புத்தாடைகள், இனிப்புகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறதாம். எந்தெந்த நாடு? எங்கு விமர்சையாக கொண்டாடப்படுகிறது? வாங்க பார்ப்போம்.
1/10
Photo Credit: oneindia
Share
இலங்கை: பக்கத்து நாடான இலங்கையில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டும். இனிப்புகள் பரிமாறிக்கொண்டும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்நாட்டு மக்களுக்கு அரசு பொதுவிடுமுறையும் விடப்படுகிறதாம்.
2/10
Photo Credit: oneindia
Share
கனடா: கனடா நாட்டில் இந்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். குறிப்பாக பஞ்சாபி மக்கள் பெருமளவில் உள்ளனர். அந்நாட்டின் மூன்றாவது அதிகாரபூர்வ மொழியாக பஞ்சாபி மொழி உள்ளது. அந்நாட்டில் வசிக்கும் பஞ்சாபி மக்கள் கோலாகலமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவர்.
3/10
Photo Credit: oneindia
Share
இங்கிலாந்து: அந்நாட்டில் பர்மிங்ஹாம் மற்றும் லிசெஸ்வர் பகுதியில் இந்தியர்கள் அதிகம் வாசுகின்றனர். எனவே அப்பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களைகட்டும்.
4/10
Photo Credit: oneindia
Share
டிரினிடாட்: கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு 'டிரினிடாட்'. இந்தியாவை போல் அந்நாட்டிலும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களைகட்டும்.
5/10
Photo Credit: oneindia
Share
நியூசிலாந்து: நியூசிலாந்தின் சில பகுதிகளில் தீபாவளி கொண்டாட்டம் ஒரு வாரம் முன்பே களைகட்ட தொடங்கிவிடும். மக்கள் உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவர்.
6/10
Photo Credit: oneindia
Share
நேபாளம்: நேபாள நாட்டில் தீபாவளி பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. மக்கள் பட்டாசுகள் வெடித்தும், கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தியும் கொண்டாடி வருகின்றனர்.
7/10
Photo Credit: oneindia
Share
மொரிஷியஸ்: இந்தியர்கள் குறிப்பாக இந்து மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்று மொரிஷியஸ் தீவு நாடு. அந்நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் இந்து மக்கள் என கூறப்படுகிறது. இந்தியாவை போல் மொரிஷியஸ் நாட்டிலும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மக்களுக்கு பொதுவிடுமுறையும் விடப்படுகிறதாம்.
8/10
Photo Credit: oneindia
Share
இந்தோனேசியா: இந்திய மக்கள் தீபாவளியை கொண்டாடுவது போல் இந்தோனேசிய மக்களும் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடை உடுத்தியும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவர்.
9/10
Photo Credit: oneindia
Share
மலேசியா: இந்தியர்கள் அதிகம் வாழும் மற்றொரு நாடு மலேசியா. அங்கு தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களைகட்டும். தீபாவளி நாளன்று மலேசிய மக்கள் எண்ணெய் குளியலிட்டு புத்தாடை உடுத்தி கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துவர்.



Click it and Unblock the Notifications