Home / Photos
டாஸ்மாக்கின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? பண்டிகை காலங்களில் எவ்வளவு?
By Chandru
டாஸ்மாக் மூலம் கிடைக்கும் ஒரு நாள் வருமானம் எவ்வளவு? பண்டிகை காலங்களில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: Gemini.AI
Share
தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2000 டாஸ்மாக் கடைகளும், இணை மதுபான கடைகளும் செயல்பட்டு வருகிறது.
2/5
Photo Credit: Gemini.AI
Share
தமிழக அரசுக்கு பெரும் வருமானம் கொடுக்கும் துறையாகவும் டாஸ்மாக் உள்ளது. மேலும் தற்போது மதுபாட்டில் ஒன்றுக்கு எம்ஆர்பி விலையை விட 10,20 ரூபாய் அதிக வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் இதற்கான தீர்வு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் சில்லறை விற்பனை மூலம் நாள் ஒன்றுக்கு? வார விடுமுறை? விசேஷ நாட்கள்? ஆகிய நாட்களில் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறது என்பதை வாங்க பார்ப்போம்.
3/5
Photo Credit: Gemini.AI
Share
சில்லறை விற்பனை மூலம் நாள் ஒன்றுக்கு டாஸ்மாக் மூலம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
4/5
Photo Credit: Gemini.AI
Share
வார இறுதி நாட்களில் மைண்ட் ரிலாக்ஸ் செய்யும் மது பிரியர்கள் மதுபானத்தை விரும்பி வாங்கி வருகின்றனர். அந்த வகையில் வார இறுதி நாட்களில் 120-130 கோடி ரூபாய் வருமானம் கிடைக்குமாம்.
5/5
Photo Credit: Gemini.AI
Share
அதேபோல் பண்டிகை நாட்களில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் எம்ஆர்பி விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியும் தரமான மதுபானம் கிடைப்பதில்லை என மதுபிரியர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications