Home / Photos
இந்தியாவில் இருக்கும் டாப் 5 சிறிய விமான நிலையங்கள் எவை தெரியுமா? பாத்தா நீங்களே அசந்துபோவீங்க!
By Divya Bala
இந்தியாவில் பல பெரிய விமான நிலையங்கள் இருக்கும் நிலையில் சில இடங்களில் இடமே இல்லையென்றாலும் தேவைப்படும் என்பதால் சிறிய இடத்தில் கூட விமான நிலையங்கள் அமைத்துள்ளார்கள். அவை எந்த ஊரில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
1/6
Share
பெரிய பெரிய நகரங்களில் மட்டுமே விமான நிலையங்கள் இருக்கும் என்பதை மாற்றி சிறிய நகரங்களிலும் விமான நிலையங்கள் அமைத்து மக்கள் எல்லா இடங்களுக்கும் சென்று மக்கள் எளிதில் வரவேண்டும் என்பதற்காகவே சிறியதாக இருந்தாலும் ஏர்போட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.
2/6
Share
குலு மணாலி விமான நிலையம்: மிகவும் சிறிய ஓடுதள பாதையை கொண்டது இந்த விமான நிலையம். ஹிமாச்சல் பிரதேஷத்தில் அமைந்துள்ள இந்த ஏர்போர்ட் மிகவும் சிறிய விமான நிலையங்களில் ஒன்றாகும். அருகிலே ஆறு ஓட, இந்த இடமும் அழகாக இருக்கும்.
3/6
Share
அகத்தி விமானநிலையம்: லக்ஸதீப் செல்ல நினைப்பவர்கள் கப்பலில் மட்டும் தான் செல்லும் நிலை இருந்தது. அதை மாற்றி கடல் நீர் சூழ சிறிய விமான நிலையத்தை ஆகத்தியில் இந்தியா அரசாங்கம் அமைத்தது. இதனால் எளிதில் அங்கு சென்று வர முடிகிறது.
4/6
Share
அம்பிகாபூர் விமானநிலையம்: சத்தீஸ்கரில் உள்ள இந்த விமான நிலையம், சட்டிஸ்கரின் 4வது விமான நிலையம் ஆகும். நல்ல காற்றோட்டம் வாய்ந்த இந்த விமான நிலையம் இந்தியாவின் சிறிய ஏர்போர்ட்டுகளில் ஒன்றாகும்.
5/6
Share
பால்ஜெக் விமானநிலையம்: மேகாலயாவில் கட்டமைக்கப்பட்ட இந்த விமான நிலையம் நல்ல காற்றோட்டத்துடன் அமைக்கப்பட்ட சிறிய நிலையம் ஆகும். தற்போது இது பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6/6
Share
சிம்லா விமான நிலையம்: இந்த விமான நிலையம் முதலில் விஐபி மற்றும் ஜெட்களுக்காகவே மட்டும் இயங்கியது. தற்போது பொதுமக்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது. ஹிமாச்சலில் உள்ள சிறிய விமான நிலையம் இது ஆகும்.


Click it and Unblock the Notifications