Home / Photos
மெய் சிலிர்க்க வைக்கும் சுதந்திர தின விழா பாடல்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ!
By Divya Bala
சுதந்திரதின விழாவில் ஒலிக்கப்படும் பாடல்கள் சினிமாவில் தேசப்பற்று நிறைந்த படங்களில் இசையமைக்கபட்டவை ஆகும். எப்போது கேட்டாலும் புல்லரிக்க வைக்கும் இந்த பாடல்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
1/8
Share
சக் தே இந்தியா: ஷாருகான் நடிப்பில் வெளியான இந்த படத்தின் டைட்டில் பாடல் இந்தியா மக்கள் மத்தியில் மிகவும் எளிதாக ஈர்த்தது. இதை பாடியவர்கள் சுக்ஹவிந்தர் சிங் , சலீம், மரியான்னே டி கிருஸ் ஆகியோர் பாடியுள்ளார்கள்.
2/8
Share
மா துஜே சலாம்: இந்த படத்தில் இடம்பெற்ற பாடலான வந்தே மாதரம் பாடல் சிறந்த தேசப்பற்று பாடலாகும். இந்த பாடலை வந்தே மாதரம் என ஏ ஆர் ரஹ்மான் பாடிய பாடல் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்க தொடங்கியது.
3/8
Share
ராஷீ: இந்த படத்தில் உள்ள ஏ வதன் என தொடங்கும் பாடல் இணையத்தில் இன்றும் பலரால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது. அலியா பட் நடிப்பில் சுனிதி சவுஹான் குரலில் வெளியான இந்த பாடல் சிறந்த தேச பற்று பாடல்களில் ஒன்றாகும்.
4/8
Share
ராங் டே பாஸந்தி: அமீர் கான் நடிப்பில் வெளியான இந்த படத்தின் டைட்டில் பாடல் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில் டாலர் மெஹந்தி மற்றும் சித்ரா பாடியதாகும். இந்த பாடலும் சுதந்திர தினத்தன்று பல இடங்களில் ஒலிக்கும்.
5/8
Share
ஸ்வதேஸ்: ஷாருக்கான் நடிப்பில் வெளியான இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ஆகும். இந்த படத்தில் இவர் பாடிய ஏ ஜோ தேஸ் ஹை தேரா பாடல் ரசிகர்கள் பலரை ஈர்த்துள்ளது.
6/8
Share
பார்டர்: இராணுவ வீரர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் சந்தேஷி ஆதே ஹை என்ற பாடல் சுதந்திர தினத்தில் கண்டிப்பாக ஒலிக்கப்படும் ஒரு பாடலாகும். சோனு மற்றும் ரூப் குமார் இந்த பாடலை பாடியுள்ளார்கள்.
7/8
Share
ஆனந்த் மத்: 1952ல் வெளியான இந்த படம் சுதந்திர போராட்டத்தை வைத்து எடுக்கப்பட்ட பழைய படமாகும். இதில் வரும் வந்தே மாதரம் பாடலை லதா மங்கேஸ்கர் பாடியுள்ளார்.
8/8
Share
ஜெய்ஹிந்த்: அர்ஜுன் நடிப்பில் வெளியான இந்த படத்தில் வரும் தாயின் மணிக்கொடி பாடல் அனைவரது இணையதள பக்கத்தையும் சுதந்திர தினத்தில் ஆக்கிரமித்து இருக்கும். தமிழில் வந்த இந்த தேசப்பற்று பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications