Home / Photos
PHOTOS : ரூபாய் நோட்டுகள் எதனால் தயாரிக்கப்படுகிறது தெரியுமா? சுவாரசிய தகவல் இங்கே..
By Chandru
"காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு உலகில் உள்ள மக்கள் அனைவரும் பணத்தை தேடி ஓடி கொண்டிருக்கின்றனர்.நமது அன்றாட தேவைகளுக்கு பணம் மிகவும் முக்கியம்.
1/8
Share
"காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு உலகில் உள்ள மக்கள் அனைவரும் பணத்தை தேடி ஓடி கொண்டிருக்கின்றனர்.நமது அன்றாட தேவைகளுக்கு பணம் மிகவும் முக்கியம்.
2/8
Share
நமது தேவைகளை பூர்த்தி செய்யும் கருவியாக இருப்பது பணம்.நீரின்றி அமையாது உலகு என்பது போல் பணமின்றி நகராது மனிதர்களின் வாழ்கை என உலகம் பணத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கிறது.நம் வாழ்வில் பணம் முக்கிய பங்காற்றி வருகிறது.
3/8
Share
ஆனால் இந்த பணம் அதாவது ரூபாய் நோட்டுகளை எப்படி தயாரிக்கின்றனர் என நீங்கள் நினைத்ததுண்டா? பலரும் ரூபாய் நோட்டுகளை காகிதத்தால் தான் தயாரிக்கின்றனர் என நினைத்திருப்பீர்கள்.ஆனால் அது உண்மை இல்லை.
4/8
Share
காகிதத்திற்கு அதிக ஆயுள் இல்லை, காகிதத்தால் ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்பட்டால் அது எளிதில் கிழிந்து விடும்.இதனால் தான் ரூபாய் நோட்டுகள் பருத்தியால் தயாரிக்கப்படுகின்றன.பலருக்கும் இந்த உண்மை ஆச்சரியத்தை தரலாம்.
5/8
Share
ரூபாய் நோட்டுகள் 100% பருத்தியால் தான் தயாரிக்கப்படுகிறது.பருத்திக்கு அதிக ஆயுட் காலம் இருக்கின்றது.பருத்தியால் செய்யப்படும் நோட்டுகள் எளிதில் கிழியாது என்பதாலும் இந்தியாவை போல் பல நாடுகளில் பருத்தியால் ரூபாய் நோட்டுகளை தயாரித்து வருகின்றனர்.
6/8
Share
ஆமாம் அது எப்படி பருத்தியில் ரூபாய் நோட்டுகள் செய்யப்படுகிறது என நீங்கள் கேட்கலாம்? பருத்தியில் லினன் என்ற சொல்லப்படும் நார்சத்து உள்ளது அத்துடன் ஜெலட்டின் பிசின் கரைசலுடன் கலக்கப்பட்டு ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்படுகிறது.
7/8
Share
இந்த முறையில் ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்பட்டால் அது நீண்ட நாட்கள் நீடிக்கும்.மேலும் பருத்தியால் செய்யப்படும் நோட்டுகளுக்கும் சட்ட விரோதமாக செய்யப்படும் கள்ள நோட்டுகளுக்கும் வித்தியாசம் இருக்கும்.
8/8
Share
இதனால் கள்ள நோட்டுகளை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.மேலும் நாம் வைத்திருக்கும் சில ரூபாய் நோட்டுகள் மிகவும் அழுக்காகவும் சில சமயம் கிழிந்தும் இருக்கும்.இந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி பெற்றுக்கொண்டு அதனை அழித்து விடுகிறது.


Click it and Unblock the Notifications