Home / Photos
ஆர்ஆர்ஆர் பட ஒளிப்பதிவாளரின் மனைவி திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்!
By Chandru
பாகுபலி, ஆர்ஆர்ஆர் திரைப்பட ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் மனைவியின் திடீர் மரணம் கன்னட திரையுலகினரை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
1/6
Photo Credit: instagram
Share
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி, ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
2/6
Share
பாகுபலி ஒன்று, இரண்டாம் பாகம் இரண்டுமே மிக பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படம். பிரம்மாண்டத்தின் உச்சமாக எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கே.கே.செந்தில் குமார்.
3/6
Share
இப்படம் மட்டுமல்லாமல் ராஜமௌலியின் சை, சத்ரபதி, யமடோங்கா, மகதீரா, ஈ உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் செந்தில்குமார். அதேபோல் பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் ராஜமௌலியின் ஃபேவரைட் ஒளிப்பதிவாளர் என்றும் கூட சொல்லலாம்.
4/6
Share
செந்தில்குமாரின் மனைவி பெயர் ரூஹி. கடந்த 2009ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரூஹி பாப்புலரான யோகா பயிற்சியாளர் ஆவார். அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்ளிட்ட டாப் நடிகர், நடிகைகளுக்கு யோகா பயிற்சியாளராக பணியாற்றியவர்.
5/6
Share
கோவிட் காலகட்டத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தவர் ரூஹி. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் ரூஹிக்கு உடல்சர்ந்து பல பிரச்சினைகைளை ஏற்படுத்தியது. அன்று முதல் உடல் இறுதியாக பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த ரூஹி உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
6/6
Share
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரூஹிக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது இருப்பினும் அது பயனளிக்காமல் உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது கேகே செந்தில்குமாரின் மனைவி ரூஹி உயிரிழப்பு கன்னட திரை துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications