Drishyam 3: த்ரிஷ்யம் 3 படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? மாஸ் கலெக்ஷன்!
மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'த்ரிஷ்யம் 3' திரைப்படம் கடந்த 4 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு என்பதை வாங்க பார்ப்போம்.
கடந்த மே 21ம் தேதி உலகளவில் ரிலீசான மலையாள திரில்லர் திரைப்படம் 'த்ரிஷ்யம் 3'. இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான இப்படம், மாபெரும் எதிர்பார்ப்புடன் உலகளவில் ரிலீசானது.
த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகம் 2021இல் ரிலீசாகி மாபெரும் ஹிட்டானது. விமர்சனத்திலும் சரி, வசூலிலும் சரி பான் இந்தியா அளவில் செம ஹிட்டானது. பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம், தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரிலீசாகி செம ஹிட்டானது. மோகன்லால் கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார்.
முதல் பாகத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து இரண்டாம் பாகம் 2021இல் ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்றது. ரசிகர்களின் அமோக வரவேற்பை தொடர்ந்து மூன்றாம் பாகம் உருவானது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் த்ரிஷயம் 3 உருவாகி கடந்த மே 21ம் தேதி உலகளவில் ரிலீசானது.
தியேட்டரில் ரிலீசான முதல் நாள் முதல் ஷோவில் இருந்து ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்த இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் ஆடியன்ஸ் கூட்டம் குறையவில்லை.
இந்த நிலையில் இப்படம், ரிலீசான முதல் நாளிலேயே 50 கோடி ரூபாய் வசூலித்ததாகவும், கடந்த 4 நாட்களில் உலகளவில் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து ஹிட் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications