Drishyam 3: ரிலீசான முதல் நாளில்.. த்ரிஷ்யம் 3 செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
'த்ரிஷ்யம் 3' திரைப்படம் தியேட்டரில் ரிலீசான முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்
த்ரிஷ்யம் 3: மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள 'த்ரிஷ்யம் 3' நேற்று 21ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. எதிர்பார்ப்புடன் ரிலீசான இப்படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.
த்ரிஷ்யம்: இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013இல் வெளிவந்த மலையாள திரைப்படம் 'த்ரிஷ்யம்'. மோகன்லால் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருந்தார். கதை என்னான்னா? கல்லூரியில் படிக்கும் மோகன்லாலின் மகளுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்க, மகளும், அம்மாவும் சேர்ந்து அந்த இளைஞனை எதிர்பாராத விதமாக கொன்றுவிடுகின்றனர்.
பான் இந்தியா ஹிட்: கொலை செய்யப்பட்ட இளைஞனின் உடலை மோகன்லால் என்ன செய்கிறார்? மகள், மனைவியை காப்பாற்ற என்னவெல்லாம் செய்கிறார்? போலீசிடம் இருந்து தப்பிக்க என்னென்ன செய்கிறார்? என்பதே படத்தின் சுவாரசியமான கதையாக வெளியாகி மெகா ஹிட்டானது. முதல் பாகம் மெகா ஹிட்டானதை தொடர்ந்து தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகள், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. படம் பான் இந்தியளவில் செம ஹிட்டானது.
தொடரும்: முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து 2021ம் ஆண்டு இரண்டாம் பாகம் ரிலீசானது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமும் ரிலீசாகி அமோக வரவேற்பு பெற்றது. இரண்டு பாகங்களிலும் போலீசுக்கு டிமிக்கி காட்டிய மோகன்லால் மூன்றாவது பாகத்தில் பிடிபடுவாரா? என்ற எதிர்பார்ப்புடன் மூன்றுவது பாகம் உருவானது.
எதிர்பார்ப்பு: பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று மே 21ம் தேதி உலகளவில் த்ரிஷயம் 3 ரிலீசானது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறதாம். கொஞ்சம் இழுவையா இருக்கு என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஏமாற்றம்? கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் தியேட்டரில் கூட்டம் கொஞ்சம் மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. வீக் எண்டு நாட்களில் எப்படியோ தெரியல? ஆனால் ஏற்கனவே வெற்றிநடைபோடும் கருப்பு படத்திற்கு சினிமா ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனராம்.
வசூல்: மாபெரும் எதிர்பார்ப்புடன் ரிலீசான 'த்ரிஷயம் 3' முதல் நாளில் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்த கலெக்ஷனை விட இது குறைவே. வரும் வீக் எண்டு நாட்களில் நிலைமை மாறுமா? கலெக்ஷன் எகுறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications