Drishyam 3: ஓடிடியில் வெளியாகும் த்ரிஷ்யம் 3.. எப்போது? எதில் பார்க்கலாம்?
மோகன்லால் நடிப்பில் வெளிவந்த 'த்ரிஷ்யம் 3' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. வாங்க எந்த ஓடிடி? எப்போ? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
த்ரிஷ்யம் 3: ஜீத்து ஜோசப் எழுதி, இயக்கிய திரில்லர் ட்ராமா திரைப்படம் 'த்ரிஷ்யம் 3'. மோகன்லால் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக மீனா நடித்துள்ளார். மேலும் மகள்களாக அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் நடித்துள்ளனர். சித்திக், ஆஷா சரத் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
ஹிட்: முதல் இரண்டு பாகங்களும் மாபெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து மூன்றாவது பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் உருவானது. சினிமா பிரியரான ஜோர்ஜ்குட்டியின் ஆட்டம் மீண்டும் தொடங்கியதா? முடிந்தது? என்பதே இப்படத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது.
கதை என்ன? சினிமா பிரியரான ஜோர்ஜ்குட்டி இந்த பாகத்தில் கதை ஆசிரியராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் உருமாறியுள்ளார். அதேவேளையில் மகன் கொலை செய்யப்பட்டிருந்தாலும் அது ஜோர்ஜ்குட்டியின் குடும்பம் தான் செய்தது என்று தெரிந்தும் அமைதியாக இருந்து சித்திக் இந்த மூன்றாம் பாகத்தில் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.
மகளுக்கு திருமண வரன்தேடும் ஜோர்ஜ்குட்டி. ஆனால் என்னவோ தெரியல எல்லாம் தட்டி செல்கிறது. எதோ தப்பா இருக்கே என்று ஜோர்ஜ்குட்டி யோசிக்க பின்னணியில் ஒரு கூட்டமே உள்ளது. தன்னை சுற்றி பெரும் சதி வேலைகள் நடப்பதை காண்கிறார் ஜோர்ஜ்குட்டி. அவ்வளவு பெரிய கொலையை மறைக்க ஜோர்ஜ்குட்டி என்னவெல்லாம் செய்தார் என்பது நமக்கு தெரியும். அதேயே அசால்ட்டாக டீல் செய்த ஜோர்ஜ்குட்டி, மகளுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளை எப்படி எதிர்கொள்கிறார். மகளின் திருமணம் நடந்ததா? சூழ்ச்சியில் யார் வெற்றி பெற்றது? என்பதே படத்தின் திரில்லர் கதைக்களம்.
தொடர் ஹிட்: முதல் இரண்டு பாகங்களை போல் இந்த மூன்றாவது பாகமும் நல்ல வரவேற்பு பெற்றது. கொஞ்சம் விமர்சிக்கப்பட்டாலும் சினிமா ரசிகர்களை ஈர்க்க தவறவில்லை. படம் ரிலீசான முதல் நாளில் இருந்து நல்ல கூட்டம்.
வசூல்: கடந்த மே மாதம் உலகளவில் ரிலீஸாகி அனைத்து தரப்பு சினிமா பிரியர்களையும் ஈர்த்த இப்படம், வசூலில் மாஸ் காட்டியது. அதன்படி, 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் 330 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்ததாக கூறப்பட்டது.
ஓடிடி? தியேட்டரில் மாபெரும் வெற்றி பெற்ற இப்படம், தற்போது ஓடிடியில் என்ட்ரி கொடுக்கவுள்ளது. தமிழில் ஹிட்டான சூர்யாவின் 'கருப்பு' படத்தை தட்டித்தூக்கிய அமேசான் பிரைம் நிறுவனம் 'த்ரிஷ்யம் 3' படத்தையும் தட்டித்தூக்கியுள்ளது. இப்படம் வரும் ஜூன் 18ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications