Home / Photos
அவசர பணத்தேவையா? நிமிடத்தில் பணம் கிடைக்க கூகுள் பே இருந்தால் போதும்.. எப்படி?
By Chandru
மனிதனுக்கு பணம் மிகவும் அவசியம் ஆனால் சில நேரங்களில் தவிர்க்கமுடியாது சூழ்நிலையில் பணம் இல்லாதபோது யாரிடம் பணம் கேட்பது என்று தெரியவில்லை என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
1/7
Share
நம் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி செல்ல பணம் மிக மிக முக்கியம். குடிக்கும் தண்ணீரில் இருந்து பறக்கும் விமானம் வரை இந்த பூமியில் பணம் இல்லாமல் எதுவும் நகராது. ஒரு மனிதனுக்கு பணம் மிகவும் அவசியம் ஆனால் சில நேரங்களில் தவிர்க்கமுடியாது சூழ்நிலையில் பணம் இல்லாதபோது யாரிடம் பணம் கேட்பது என தெரியவில்லை என்ற நிலைமை அனைவருக்கும் வந்துருக்கும், வரும் அதனை கடந்து தான் அனைவரும் வந்திருப்போம். இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் முதலில் செய்யவேண்டிய சில வழிமுறைகளை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்..
2/7
Share
கூகுள் பே: இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே கிடையாது. பேங்க் செல்லாமல் பணப்பரிவர்த்தனை செய்வதற்காக பெரும்பாலானோர் கூகுள் பே என்ற ஆப்பை செல்போனில் இன்ஸ்டால் செய்து வைத்திருப்பர். இதன் மூலம் பிறருக்கு பணம் அனுப்புவதும் பிறரிடம் இருந்து பணத்தை பெறுவதும் சுலபம். இதில் மற்றொரு நன்மையையும் உண்டு, இதன் மூலம் நம் அவசர தேவைக்கு உடனடி கடன் வாங்கிக்கொள்ளலாம்.
3/7
Share
அதில், பேருந்து, ரயில், விமான பயணம், பெர்சனல் லோன், பங்கு சந்தை உள்ளிட்ட பல விபரங்கள் இருக்கும். அதில், பெர்சனல் லோன் தனிநபர் கடன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்துகொள்ளவேண்டும். செலக்ட் செய்தவுடன் அதில் இன்ஸ்டன்ட் மணி, மணி வியூ போன்ற ஆப்ஷன்கள் காட்டும். இவைகள் தான் நமக்கு பணம் கொடுக்கப்போகும் ஆப்ஷன்கள்.
4/7
Share
கூகுள் பே பல்வேறு கடன் வழங்கும் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து நம் அவசர தேவைக்காக கடன் வழங்கி வருகிறது. சரி இந்த கூகுள் பேவில் எப்படி உடனடி கடன் பெறுவது என்பதை பார்ப்போம்.. கூகுள் பே மூலம் கடன் பெற விரும்புபவர்கள் முதலில் கூகுள் பேவில் உள்ள பிஸ்னஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
5/7
Share
இந்த ஆப்ஷன்களை கிளிக் செய்து அதில் ஒரு கணக்கை உருவாக்கி வெறும் சில மணி நேரத்தில் சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். இந்த இன்ஸ்டன்ட் மணி RBI பதிவு செய்யப்பட்ட NBFC P2P இயங்குதளமான Innofin Solutions நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதில் பணம் பெறுவதிலும், பணம் செலுத்துவதிலும் எந்தவொரு தவறும் ஏற்படாது.
6/7
Share
அதேபோல் பணம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.. பணம் பெறுவதற்கு முன் நீங்கள் கடன் பெற தகுதியுடையவரா என உங்களின் பேங்க் விபரங்களை வைத்து KYC முடிவெடுக்கும். பின்னர் பான் கார்ட், பேங்க் டீடைல்ஸ் போன்ற ஆவணங்களை சரி பார்த்து அப்லோட் செய்யவேண்டும். பின்னர் எல்லாம் சரிபார்க்கப்பட்டு உங்களின் வாங்கி கணக்குக்கு பணம் வந்து சேரும்.
7/7
Share
ஆமாம் அதிகபட்சமாக எவ்வளவு பணம் பெற்றுக்கொள்ளலாம்? உங்களின் தகுதிக்கு ஏற்றவாறு குறைந்த தொகை முதல் அதிகபட்சமாக 8 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் காலம் 6 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது. அதேபோல் வாங்கிய கடனுக்கு வட்டி விகிதம் சுமார் 13.99% இருந்து தொடங்குகிறது. ஆகையால் மக்களே உடனடி பணத்தேவைக்கு யாரையும் எதிர்பார்க்காமல் கூகுள் பே இருந்தால் போதும் என அதில் கடன் பெற்றுக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications