வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்'.. இதுவரை செய்த கலெக்ஷன் என்ன?
சமந்தா நடிப்பில் வெளிவந்த 'எங்கள் தங்கம்' திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சம்மு: இந்தியாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த சமந்தா, மீண்டும் தெலுங்கில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் அப்படங்கள் ஒன்றும் சொல்லும் அளவுக்கு போகவில்லை.
புது அவதாரம்: நடிகையாக இருந்த சமந்தா, தெலுங்கில் வெளிவந்த 'சுபம்' என்ற ஹாரர் படத்தின் மூலம் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்தார். அப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தான் நடித்து வெளிவந்த தெலுங்கு படமான 'மா இன்டி பங்காரம்' என்ற படத்தை தயாரித்தார். அப்படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வெளியானது.
படக்குழு: இயக்குநர் பிவி நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா முக்கிய ரோலில் நடிக்க அவருடன் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமந்தாவின் கணவர் இப்படத்துக்கு கதை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கதை சுருக்கம்? பெற்றோரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட சமந்தா, தனது கணவருடன் திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள பெற்றோர் ஊருக்கு செல்கிறார். திருமணத்திற்கு சம்மதிக்காத பெற்றோர்கள், உறவினர்களை எப்படி சம்மதிக்கவைப்பது, அவர்களின் அன்பை எப்படி பெறுவது என முயற்சிக்கிறார். இதற்கிடையே நீண்ட நாள் பகை ஒன்று சமந்தாவின் குடும்பத்தை தேடி வர அவர்களை துன்சம் செய்ய வீறுகொண்டு எழுகிறார் சமந்தா. குடும்பத்தால் சமந்தா ஏற்றுக்கொள்ளப்பட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் சுவாரசிய அதிரடி ஆக்ஷன் கதை.
வசூல்? கடந்த வாரம் தியேட்டரில் ரிலீசான இப்படம், வசூலிலும், விமர்சனத்திலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இப்படம், 4 நாட்களில் 48 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிநடைபோட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications