Home / Photos
சட்டென ஹோம்லி லுக்கிற்கு ரூட்டை மாற்றிய 'அரண்மனை' பட நாயகி.. இணையத்தை கலக்கும் க்ளிக்ஸ்
By Divya Bala
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் பரத், வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இப்படத்தில் ஸ்கூல் பெண்ணாக பாவாடை தாவணியில் தோன்றி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.
1/7
Share
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் பரத், வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இப்படத்தில் ஸ்கூல் பெண்ணாக பாவாடை தாவணியில் தோன்றி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.
2/7
Share
இப்படம் பூனம் பஜ்வாவுக்கு சுமாரான வெற்றியை கொடுத்தது. சேவல் படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தெனாவட்டு படத்தில் ஹோம்லி லுக்கில் அசத்தினார். அதன்பின்னர் கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தினர் .
3/7
Share
முழுக்க முழுக்க கிளமர் ரூட்டுக்கு மாறிய பூனம் தமிழில் என்ட்ரி கொடுப்பதற்கு முன் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்டட் மொழி படங்களில் ஹீரோயினாக கலக்கியுள்ளார். என்னதான் கவர்ச்சி காட்டி நடித்தாலும் கச்சேரி ஆரம்பம் படத்தை தொடர்ந்து பூனம் பஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, இதனால் பிற மொழி படங்களில் பிஸியாகி விட்டார்.
4/7
Share
அதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்த ஆம்பள திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆடி தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். மேலும் மீண்டும் சுந்தர் சி உடன் கூட்டணி சேர்ந்த அவர், அரண்மனை 2 படத்தில் கிளாமர் ரோலில் நடித்திருந்தார்.
5/7
Share
சுந்தர் சி-யின் விருப்பமான நடிகையாக மாறிய பூனம் முத்தின கத்திரிக்காய் திரைப்படத்தில் சுந்தர் சி-க்கு கதாநாயகியாக நடித்தார். இப்படம் பூனம் பஜ்வாவுக்கு கைகொடுத்தலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
6/7
Share
என்னதான் கவர்ச்சி காட்டி நடித்தாலும் பட வாய்ப்புகள் தேடி வராததால், பட வாய்ப்புகளை எப்படியாவது பெறவேண்டும் என்ற முனைப்போடு சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
7/7
Share
அந்த வகையில் தற்போது புடவையில் ட்ரெடிஷனல் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார் பூனம். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications