Home / Photos
யாரு இந்த குட்டி தம்போலினா.. ட்ரெண்டாகும் மலையாள நடிகை ஆஹானா லேட்டஸ்ட் பதிவு..
By Divya Bala
மலையாள படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஹானா கிருஷ்ணா. இவர் நடித்த லூகா படத்தின் மூலம் மக்கள் இடையே பிரபலமானார். இவர் சிறு வயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் உடன் இருப்பவர் யார் தெரியுமா என்றும் கேட்டுள்ளார்.
1/7
Share
மலையாள படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஹானா கிருஷ்ணா. இவர் நடித்த லூகா படத்தின் மூலம் மக்கள் இடையே பிரபலமானார். இவர் சிறு வயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் உடன் இருப்பவர் யார் தெரியுமா என்றும் கேட்டுள்ளார்.
2/7
Share
அஹானா 2014 இல் ராஜீவ் ரவியின் நான் ஸ்டீவ் லோபஸ் திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார். அவர் நிவின் பாலியுடன் அல்தாஃப் இயக்கிய 2017 இல் நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேலா படத்தில் நடித்தார்.
3/7
Share
2019 இல் அஹானா டோவினோ தாமஸுடன் இணைந்து காதல் படமான லூகாவில் நடித்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது நடிப்பு இந்த படத்திற்காக பாராட்ட பட்டது. இவர் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.
4/7
Share
அவர் ஷங்கர் ராமகிருஷ்ணனின் பத்தினெட்டம் படி என்ற படத்தில் நடித்தார். பிடிக்கிட்டபுளி என்ற படத்தில் இவர் நடித்தார். இந்த படம் ஜியோ சினிமாவில் வெளியிடப்பட்டது. ஆதி என்ற படத்தில் நடித்தார். இது சமீபத்தில் திரைக்கு வந்தது.
5/7
Share
சஜீவ் நாயராக ஷைன் டாம் சாக்கோ இந்த படத்தில் நடித்தார். அஹானா இந்த படத்தில் கீத்திகாவாக நடித்தார். இவரது படங்கள் மலையாளத்தில் அடுத்து அடுத்து வெளிவர தொடங்கியுள்ளன. பகத் பசில் படமான பசுவும் அற்புத விளக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
6/7
Share
அஹானா தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது போட்டோஷூட்கள் என பிஸியாக இருந்து வருகிறார். தற்போது குழந்தை பருவத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தனது அருகில் இருக்கும் குழந்தை யாரென்று இன்ஸ்டாகிராமில் கேட்டுள்ளார்.
7/7
Share
அந்த புகைப்படத்தை பார்த்து கார்ட்டூன் கதாபாத்திரமான தம்போலினா எனக்கூறியுள்ளார். அது அவரது குட்டி தங்கை தான். அவரது பெயர் ஹன்சிகா கிருஷ்ணா. இவரும் மாடலிங், போட்ஷூட் என பிசியாக இருந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications