Home / Photos
பேய்களின் சாம்பிராஜ்ஜியம்! தெரியாமல் ஓஜா விளையாடிய குடும்பம்.. காவு வாங்க காத்திருக்கும் பேய்.. இந்த திகில் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
By Divya Bala
ஓஜா(ouija) போர்டு வைத்து சிறுவயதில் பலரும் விளையாடியிருப்போம். இதை வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டாலும் இன்றும் இந்த படங்கள் மேல் ஆர்வம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் மலையாளத்தில் இதை வைத்து வெளிவந்த படம் தமிழ் ரசிகர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
1/10
Share
அதுபோல இந்த படமும் ஓஜா(ouija) போர்டு வைத்து, அதை தொழிலாக செய்ய போய் மாட்டிக்கொள்ளும் குடும்பம் தப்பித்தார்களா? இல்லையே என்பதை பயம் குறையாமல் சொல்லி இருக்கும் இந்த படம் தான் ஓஜா: ஆர்ஜின் ஆஃப் ஏவில்(Ouija: Orgin of Evil). இந்த படத்தின் முதல் பாகமாக வெளிவந்த ஓஜா இந்த படத்தின் தொடர்ச்சி தான். இரண்டில் எதை முதலில் பார்த்தாலும் கதை புரியும்.
2/10
Share
இந்த படத்தை இயக்கியவர் மைக். படம் ஆரம்பிக்கும்போது, ஒரு வீட்டையம் அதன் முன்னாள் ஆவிகளுடன் பேசப்படும் என்ற ஒரு எழுத்து பலகையுடன் ஆரம்பிக்கிறது. ஒரு வயதானவர் மற்றும் அவர் மகளுடன் அந்த வீட்டிற்கு இறந்த மனைவியிடம் பேசுவதற்காக விதவை பெண்ணான அலிஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார். மகளுக்கு அதில் நம்பிக்கை இல்லை, இருந்தாலும் அங்கு நிகழும் விஷயங்கள் அவளுக்கு ஒரு பயத்தை கொடுக்க, கடைசியாக ஒரு உருவம் வந்து மிரட்டவும் அந்த வயதானவர் பயத்தின் உச்சிக்கே போய் விடுவார்.
3/10
Share
அலிஸ் தனது இரண்டு மகள்களான லினா மற்றும் டோரிஸ் உடன் சில ஏமாற்று வித்தைகளை வைத்து வாழ்ந்து வருகிறாள். இருவரும் பள்ளிக்கும் செல்கிறார்கள். வினாவிற்கு ஒரு பாய் பிரிண்ட் இருக்கிறான். டோரிஸ் சின்ன பெண் என்பதால், அங்கு கேலிக்கு உள்ளாகிறாள். லினா வீட்டுக்கு தெரியாமல் தோழி வீட்டுக்கு செல்ல அங்கு ஓஜா போர்டு பார்த்து இது நமது வேலைக்கு பயன்படும் என்று அம்மாவிடம் சொல்ல, அவளும் மறுநாளே அதை வாங்குகிறாள்.
4/10
Share
அதை எடுத்து, செட்டப் செய்து விட்டு. அலிஸ், கேம் விளையாடி கேள்வி கேட்க, டோரிஸ் தனது அறையில் இருந்து அதற்கு பதில் சொல்லும் காட்சி வேற லெவெலில் பயத்தை கொண்டு வரும். அலிஸ் தூங்க செல்கிறாள். அந்த விளையாட்டின் மேல் ஆர்வமான டோரிஸ் விளையாடி பார்க்கிறாள். அவள் அதை எடுத்து பார்க்கும்போது ஒரு உருவம் தெரிய மிரண்டு போகிறாள். கையில் பணமில்லால் அலிஸ் யோசித்து கொண்டிருக்க டோரிஸ் ஒரு பேக்கில் இருந்து பணத்தை கொடுப்பாள்.
5/10
Share
அதை பற்றி கேட்க்கும் போது இறந்த அப்பாதான் புதையல் பற்றி சொன்னார். பேஸ்மெண்டில் இருக்கும் அறையில் இருந்து எடுத்தேன் என்று சொல்ல, தனது அம்மா போல மகளுக்கு சக்தி கிடைத்தது என சந்தோசப்பட்ட அலிஸ் அவளை வைத்து, விளையாட பலரும் அங்கு வர ஆரம்பித்தார்கள். டோரிஸ், விளையாடாமல் இருக்க அவளுக்கு கழுத்து வலிக்கிறது. அப்போது கண்ணாடியின் முன் நின்று பார்க்க அவள், பின்னால் ஒரு கருப்பு உருவம் வந்து அப்படியே அவள் வாய்க்குள் புகுந்து கொள்கிறது.
6/10
Share
தொடர்ந்து டோரிஸ், இறந்தவர்களின் குரலில் பேச, இன்னும் அதில் ஆர்வம் அதிகமாக பள்ளி செல்வதை தவிர்க்கிறாள். அலிஸ் இதை ஒரு சக்தியாக பார்க்க, லினாவிற்கு டோரிஸ் நடவடிக்கையில் ஏதோ மாற்றம் தெரிய, அவள் அறையில் பார்க்கிறாள். அவள் எதையோ தலையை திருப்பி, எழுதி கொண்டிருக்க பயந்து போன லினா மறுநாள் அதை, எடுத்து பாதர் டாம் இடம் கொடுக்க, அதை பற்றி சொல்ல வீட்டுக்கு வருகிறார். அவரும் ஓஜா விளையாட, டோரிஸ் உடம்பில் வேறு எதோ இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்.
7/10
Share
டோரிஸ், அங்கு வர பாதர் டாம் உள்ளே சென்று அதை கட்டுப்படுத்த முயற்சித்து வெளியில் வரும் அவரையும் அங்கிருக்கும் மற்ற ஆவிகள் பிடித்துக்கொள்ள, லீனாவையும் அலிஸையும் துரத்துகிறார். அலிஸ் பாதரை பார்த்து கத்த அவர் ஒரு நொடி நார்மல் ஆக, டோரிஸ் மேலே அந்தரத்தில் தொங்கும் காட்சி பயத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லும். லீனாவை தொரத்தும் டோரிஸ் அவள் காதுகளில் எதுவோ சொல்ல அலிஸ் அவளை காப்பாற்றுகிறாள்.
8/10
Share
டோரிஸ் உடம்பில் இருக்கும் பேய், வாழ்ந்த வீட்டில் தான் இப்பொது நீங்கள் இருக்கிறார்கள். அவர் ஒரு மருத்துவர் 2ம் உலக போரின் போது இங்கு வந்தவர், பல பேரை கொன்று அந்த பேஸ்மெண்டில் குவித்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள, அந்த ஓஜா போர்டு தான் காரணம் என அதை பேஸ்மெண்டில் எரிக்க அங்கு, முழுக்க மண்டை ஓடுகள் இருக்க இந்த காட்சிகள் வேற லெவெலில் பயத்தை கொடுக்கும். லீனாவின் பாய்பிரெண்ட் அங்கு வர, அவனை கொன்று தூக்கில் தொங்க விடுகிறாள் டோரிஸ்.
9/10
Share
மயங்கிய லீனாவை, அவளது அப்பாவின் ஆவி கொண்டு வந்து மெத்தையில் கிடத்த, அவள் காதுகளில் இந்த பேயை எப்படி அடக்க வேண்டும் என்று சொல்லி மறைகிறார். அவள் அப்பா சின்ன வயதில் கொடுத்த பொம்மை வாயில் தைத்து போல தைக்க சொன்னதும் பேஸ்மென்ட்டிற்கு செல்கிறாள். அங்கு அலிசை கட்டி போட்டு டோரிஸ் வைக்க, அலிஸ் மயங்கிய நிலையில் இருக்கிறாள். அவளுடன் சண்டை போட்டு அவள் வாயை தைக்க பேய் கூட்டமே லீனாவை அப்பி பிடிக்கும்.


Click it and Unblock the Notifications