Home / Photos
முகத்தை மூடியதால் மாறி போன புதுப்பெண்.. பெண்ணியத்தை பளிச்சென சொன்ன படம்.. மிஸ் பண்ணாம பாருங்க!
By Divya Bala
பெண்ணியம் பேசிய பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம். பெண் சுதந்திரம் என்றாலே பலருக்கும் ஆடையை தாண்டி யோசனைகள் செல்வதில்லை. கல்வி, பொது அறிவு என இதை பற்றி தெரியாமல் இன்னும் பல இடங்களில் பெண்கள் வீட்டை மட்டுமே உலகமாக வாழ்ந்து வருகிறார்கள். அதை சுருக்கென்ற வசனங்களுடன் அழகாக பேசிய படம் தான் லாபாட்ட லேடீஸ்.
1/11
Share
இந்த படத்தை இயக்கியவர் கிரண் ராவ். படத்தில் நடித்த அத்தனை பேருக்குமே சரியான தேர்வு. கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை அளந்து கொடுத்துள்ளார்கள். இந்த படத்தில் முக்கியமாக பேசப்படவேண்டியது, படத்தில் பேசப்படும் வசனங்கள். வசனம் எளிதியவர் சினேகா தேசாய். படத்திற்கு ஏற்றது போல டைட்டில் தமிழில் தொலைந்த பெண்கள்(laapataa ladies). 2001ல் நடப்பதாக படத்தை ஆரம்பித்துள்ளார்கள். கிராமத்தில் நடக்கும் திருமணம், கீழ்ப்படிதல் மட்டுமே குடும்ப கவுரவம் என வளர்க்கப்படும் பூல் குமாரி.
2/11
Share
திருமணம் ஆனவுடன் கணவருடன் ரயிலில் பயணிக்கிறாள். அந்த ரயிலில் இன்னும் சில புதுமண தம்பதிகள் இருக்கிறார்கள். அங்கு ஒரு பெண்மணி வரதட்சணையை பெருமையாக பேச கதாநாயகன் தீபக் அதற்கு பதில் சொல்லாமல் இருக்க அவனுக்கு ஏதோ குறை என பேசுகிறாள். இரண்டு மணப்பெண்களும் முகம் முழுவதும் மூடிய உடை அதுவும் ஒரே கலரில் இருப்பதால் யார் யார் என்பது அடையாளம் தெரியாமல், பூல் குமாரிக்கு பதிலாக ஜெயாவை வீட்டுக்கு அழைத்து செல்கிறான் தீபக். அங்கு முகத்தை பார்க்கும் சொந்தங்கள் அதிர்ச்சியாக இங்கு ஒரு வசனம் வரும். உனக்கு கணவரை கூட அடையாளம் தெரியவில்லையா என்று கேட்க முகத்தை மூடி வெறும் ஷூ மட்டுமே தெரிய எப்படி புதிதாக ஒருவரை அடையாளம் தெரிந்துகொள்ள முடியும் என்பாள் ஜெயா.
3/11
Share
மறுமுனையில் தொலைந்து போன பூல் குமாரி ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பறையில் அந்த இரவை கழிப்பாள். மனைவிகளை தொலைத்த இருவரும் போலீசில் தகவல் கொடுக்க, பூல்குமாரி புகைப்படத்தை கேட்க அதில் முகம் முக்காடால் மறைந்து இருக்கும். தீபக்கின் நண்பன் MLA இடம் உதவி கேட்க கொஞ்சம் கலகலப்பாகவும் இந்த படம் நகரும். தீபக் ஊரில் இருக்கும் இன்ஸ்பெக்டர் பணத்தாசை பிடித்தவர் என்பதால் ஜெயாவின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வர போராடுவார்.
4/11
Share
ஜெயா தனது உண்மையான பெயரை மறைத்து புஷ்பா ராணி என்றும், தவறான போன் நம்பர் என பொய்யான தகவலை சொல்லிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த போனில் யாருடனோ பேச, பணத்தை அனுப்ப என அனைத்தையும் இன்ஸ்பெக்டர் வேவு பார்க்கிறார். அதே சமயம் பூல் குமாரிக்கு அந்த ஸ்டேஷனில் சோட்டு என்பவன் உதவ, அங்கு கடை வைத்திருக்கும் மஞ்சு மாய் அவளுடனே அவளை தங்க வைக்கிறாள். பூல் குமாரி சொந்த ஊரின் பெயரை தவிர அந்த எங்கு இருக்கிறது என்பதை கூட தெரிந்து வைக்காத பெண்ணாக வளர்க்கப்பட்டிருக்கிறாள்.
5/11
Share
மஞ்சு மாயி, அவள் முட்டாளாக இருக்கிறாள் என்பதை சொல்லும் வசனங்கள் அருமையாக இருக்கும். தொலைத்தவன் அவன்தான், தனியாக வளராது கஷ்டம் தான் வாழ பழகிட்ட நமக்கு நாமதான், கணவனுக்கு அடிக்கும் உரிமை இருக்குன்ன, எனக்கும் இருக்கு என அவர் பேசும் வசனங்கள் எல்லாமே கைதட்ட வைக்கும் ரகங்கள். அவருடன் இருந்து புதிதாக இனிப்பு ஒன்றை செய்து கொடுக்க, அது நல்ல விற்பனை ஆகிறது. அதை ருசிபார்க்க பூல் குமாரி சொல்ல, இனிப்பு சாப்பிடும் அளவுக்கு வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லை என பேசும் மஞ்சு மாயி என கதை சிறப்பான வசனங்களுடன் நகர்கிறது
6/11
Share
அப்படியே தீபக் வீட்டில் இருக்கும் ஜெயா அவனது குடுமபத்துடன் நன்றாக பழக, தீபக்கின் அண்ணன் மனைவி நன்றாக வரையும் திறமை வைத்துள்ளாள் என்பதை தெரிந்து கொண்டு அவளை ஊக்குவிக்கிறாள். தீபக் அம்மா செய்யும் சாப்பாடை புகழ்ந்து பேசும் ஜெயா, இப்படியெல்லாம் யாரும் பேசியதில்லை என உருகும் அவர், என் அம்மா செஞ்சு கொடுத்த சப்பாத்தியும், குழம்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும், இவங்களுக்கு அதை செஞ்சி கொடுத்த அவங்களுக்கு புடிக்கல, இப்போ அது எப்படி செய்யணும் என்பதே மறந்துட்டேன் என சொல்லும்போது ஜெயா, உங்களுக்கு பிடிச்சதை சாப்பிட யாரும் சொல்லனுமா என பேசுவாள். இந்த வசனமும் கண்டிப்பாக வீட்டில் குடும்பத்தலைவியாக இருக்கும் பல பெண்களுக்கு தேவையான ஒன்று தான்.
7/11
Share
தீபக் வீட்டின் நெற்பயிர்களில் பூச்சு அரிக்க அதற்கு வழி சொல்லும் ஜெயா, அவள் ஏதோ படித்திருக்கிறாள் என புரிந்து கொண்ட தீபக்கின் அண்ணி கேட்க அப்பா இருக்கும்வரை விவசாயம் செய்தோம். அதை விற்று தான் எனக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்தார்கள் என சொல்கிறாள்.
8/11
Share
எந்த ஊர் என்பது கூட தெரியாமல் இருக்கிறாயே என ஒவ்வொரு ஊரின் பெயராக சோட்டு சொல்ல, ரயில்வே அதிகாரியிடம் தொலைந்த விசயத்தை சொல்லி கணவரின் பெயரை கேட்டால் கையை காண்பிக்கிறாள். பெயரை சொன்னால் அவள் மதிக்காத பெண் என பெயர் சூட்டப்படுவாள் என சமூகம் அவள் மேல் திணித்ததை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள்.
9/11
Share
அதே சமயம் மனைவியை பிரிந்த தீபக் தேடி அலைகிறான். ஒருக்கடையில் அந்த முகத்தை மூடிய புகைப்படத்தை காட்ட இப்படியெல்லாம் முகத்தை மூடுன ஒருவரை எப்படி அடையாளம் காணமுடியும் என்று கேட்பார். அவர் பின்னாடியே அவரது மனைவி பர்தா அணிந்து கண்கள் மட்டும் தெரிய வந்து நிற்பார். சின்ன சின்ன இடங்களில் கூட சரியான காட்சிகள் வைத்துள்ளது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ்


Click it and Unblock the Notifications