Home / Photos
ஹீரோவுக்கு நிகரான சம்பளம்.. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் டாப் 10 காமெடி நடிகர்களின் சம்பள லிஸ்ட்!
By Divya Bala
திரைப்படங்களில் கதாநாயகன் நாயகி எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு காமெடி நடிகர்கள் முக்கியம் ஆகிவிட்டார்கள். காமெடி நடிகர்களை திரையில் பார்த்தாலே ரசிகர்கள் குஷியாகிவிடுகிறார்கள். ஆகையால் இவர்களின் சம்பளமோ கதையின் நாயகர்கள் வாங்கும் அளவுக்கு வந்துவிட்டது.
1/10
Share
திரைப்படங்களில் கதாநாயகன் நாயகி எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு காமெடி நடிகர்கள் முக்கியம் ஆகிவிட்டார்கள். காமெடி நடிகர்களை திரையில் பார்த்தாலே ரசிகர்கள் குஷியாகிவிடுகிறார்கள். ஆகையால் இவர்களின் சம்பளமோ கதையின் நாயகர்கள் வாங்கும் அளவுக்கு வந்துவிட்டது.
2/10
Share
சந்தானம்: இவர் இல்லாமல் படங்களே இல்லை என்ற அளவுக்கு காமடி செய்துள்ளார். தற்போது ஹீரோவாக [பல படங்களில் நடித்துள்ளார். ஒரு நாள் சம்பளமாக 15லட்சம் முதல் வாங்குகிறார். ஒரு படத்திற்கு 5கோடி வரை வாங்குகிறார்.
3/10
Share
வித்யுலேகா: புலி, வேதாளம், மாப்ள சிங்கம், மற்றும் பா பாண்டிஎன பல படங்களில் காமெடி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கி வரும் வித்யு 8 முதல் 10 லட்சம் வரை சம்பளமாக வாங்குகிறார்.
4/10
Share
கருணாஸ்: பல திரைப்படங்களில் சப்போர்டிங் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் காமெடி நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சூரரை போற்று படத்தில் 3லிருந்து 5 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளார்.
5/10
Share
சூரி: நடிகர் சூரி என்பதை விட பரோட்டா சூரி என்றல் அனைவர்க்கும் தெரியும். அந்தளவுக்கு வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானவர் சூரி. இவர் படிப்படியாக முன்னேறி கதாநாயகனாக நடிக்கும் அளவுக்கு வளர்த்துள்ளார். இவர் 25 முதல் 40 லட்சம் வரை சம்பளமாக வாங்குகிறார்.
6/10
Share
ரெடின் கிங்ஸ்லி: டாக்டர் படம் மூலம் மக்கள் மனதை பிடித்தவர் ரெடின். தற்போது இவர் குரலை கேட்டாலே மகிழ்ச்சி ஆகும் அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் ஒரு படத்திற்கு 15 முதல் 25 வரை லட்சம் சம்பளமாக வாங்கி வருகிறார்.
7/10
Share
கருணாகரன்: சூத்து கவ்வும் படத்தில் நடித்து, யாமிருக்க பயமேன், ஜிகர்தண்டா, யான், கடைசியாக அயலான் படம் வரை அவரது காமெடியில் கலக்கி உள்ளார். இவர் ஒரு படத்திற்கு 5முதல் 8 லட்சம் வரை சம்பளமாக வாங்குகிறார்.
8/10
Share
ஆர் ஜே பாலாஜி: நடிகர், மற்றும் காமெடியனாக பிரபலமானவர் ஆர் ஜே பாலாஜி. இவர் சமீபத்தில் படங்களை இயக்கி நடிக்க ஆரம்பித்தார். இவர் கிட்டத்தட்ட 10 முதல் 15 வரை சம்பளமாக பெற்று வருகிறார். மூக்குத்தி அம்மன், ரன், வீட்ல விஷேசம், சிங்கப்பூர் சலூன் என படங்களில் கலக்கி உள்ளார்.
9/10
Share
வடிவேலு: காமெடி என்றாலே இவர் இல்லாத படம் இல்லை என்பது போல பல படங்களில் நடித்து மக்களிடையே தனி ரசிக கூட்டத்தை பெற்றவர் வடிவேலு. படமே நடிக்காமல் இடைவெளி விட்டு மீண்டும் சந்திரமுகி 2ம் பாகத்தில் நடித்தார். மேலும் மாமன்னன் படத்தில் அவரை வேறு விதமாக மக்கள் பார்த்தனர். இவர் 8 முதல் 10 வரை லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.


Click it and Unblock the Notifications