Home / Photos
PHOTOS : 'சின்னத்தம்பி' படத்தில் வரும் கவுண்டமணியின் ரீல் மனைவியை நியாபகம் இருக்கா?.. இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்களேன்!
By Chandru
80-களில் காமெடி நடிகையாகவும், கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை அனுஜா ரெட்டி. நடிகர் பிரபு நடிப்பில் வெளியான சின்னத்தம்பி திரைப்படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமான அனுஜா தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1/7
Photo Credit: instagram
Share
80-களில் காமெடி நடிகையாகவும், கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை அனுஜா ரெட்டி. நடிகர் பிரபு நடிப்பில் வெளியான சின்னத்தம்பி திரைப்படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமான அனுஜா தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
2/7
Photo Credit: instagram
Share
தனது 14 வயதிலேயே சினிமா துறையில் என்ட்ரி கொடுத்த அனுஜா, குரூப் டான்சராக சினி துறையில் வலம் வந்தார். திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு நடனமாடி வந்த அனுஜாவுக்கு படத்தில் கேரக்டர் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
3/7
Photo Credit: instagram
Share
1986 ஆம் ஆண்டு இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான 'முதல் வசந்தம்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டானது. இப்படத்தை தொடர்ந்து அனுஜாவுக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.
4/7
Photo Credit: instagram
Share
முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் குவியும் என்று அனுஜா எதிர்பார்க்கா வெறும் கிளாமர் கதாபாத்திரம் மாட்டும் தான் கிடைத்ததாக கூறியிருந்தார். மேலும் வேறு வழி இல்லாமல் கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
5/7
Photo Credit: instagram
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் அனுஜா நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் பெரும்பாலும் கிளாமர் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார்.
6/7
Photo Credit: instagram
Share
நடிகை அனுஜா பல கிசுகிசுக்களுக்கு பெயர் போனவர். கவுண்டமணியையும் இவரையும் இணைத்து பல கிசுகிசுக்கள் வலம் வந்தன. இப்படியாக சினிமா துறையில் பல வலிகளுடன் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த அனுஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி 90ஸ் கிட்ஸை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
7/7
Photo Credit: instagram
Share
தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் அனுஜா, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரீல்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அனுஜாவின் சமீபத்திய புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் செம ஷாக்காகியுள்ளனர். தற்போது அனுஜாவின் இன்ஸ்டா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications