ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே நடனம்.. ரசிகர்களை கவர்ந்த நடிகைகள் யாரெல்லாம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஹீரோயின்கள் மட்டுமில்லாமல் ஸ்பெஷல் அபியரன்ஸ் செய்யும் நடிகைகளும் தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார்கள். முக்கியமாக ஐட்டம் பாடல்கள் வைத்தே அந்த படத்தை பார்க்க பல படங்கள் உள்ளன. சில நடிகைகள், வெறும் சில நிமிடங்களில் தங்களின் நடனத்தால் மட்டுமே ரசிகர்களை வசீகரித்து, அந்த பாடலை முணு முணுக்க வைத்துள்ளார்கள்.
ஸ்னிக்தா அகோல்கர்: மிஸ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே படத்தின் ‘கத்தாழ கண்ணால குத்தாதே’ என்ற பாடலில் மஞ்சள் புடவையில் ஆடிய இவரின் நடனம், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறது
சோனா ஹைடன்: தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்த இவர், தமிழ் சினிமாவில் ஸ்பெஷல் அபியரன்ஸ் மற்றும் ஐட்டம் பாடல்களால் ரசிகர்களிடம் பிரபலமானார். குறிப்பாக சிவப்பதிகாரம் படத்தின் ‘மண்ணார்குடி மண மணக்க’ பாடலில் ஆடிய இவரின் நடனம், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
அஷ்மிதா சிங்: தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தமிழ் ரசிகர்களுக்கு பெரிதும் நினைவில் நிற்பது சலீம் திரைப்படத்தின் ‘மஸ்காரா போட்டுப் மயக்குறியே’ பாடல் மூலமாகத்தான். அந்த பாடலில் இவரின் நடனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
முமைத் கான்: தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபலமான ஐட்டம் பாடல் நடனக் கலைஞர். தமிழ் சினிமாவில் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் ‘நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே’, போக்கிரி படத்தின் ‘என் செல்லப் பேரு ஆப்பிள்’, மற்றும் கந்தசாமி படத்தின் ‘என் பெயர் மீனாகுமாரி’ போன்ற ஹிட் பாடல்களில் ஆடி நடனத்தால் ரசிகர்களை தன் பக்கம் வசீகரித்தார்
அல்போன்சா: தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்த இவர், 1995‑களில் இருந்து ஐட்டம் பாடல்களில் அதிகம் கவனிக்கப்பட்டார். குறிப்பாக பாஷா படத்தின் ‘ரா ரா ரமையா’, பார்வை ஒன்றே போதுமே படத்தின் ‘நீ பார்த்துட்டு போனாலும்’, தில் படத்தின் ‘மச்சான் மீசை’, மற்றும் ஸ்ரீ படத்தின் ‘மதுரா ஜில்லா’ போன்ற பாடல்களில் ஆடிய நடனத்தால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.


Click it and Unblock the Notifications