Home / Photos
41வது பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.. அவரின் மனைவி, குழந்தைகளை பாத்துருக்கீங்களா?
By Chandru
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் பலரும் ஸ்ரீசாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்ளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீசாந்தின் மனைவி மற்றும் குழந்தை புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
1/7
Share
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் பலரும் ஸ்ரீசாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்ளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீசாந்தின் மனைவி மற்றும் குழந்தை புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
2/7
Share
கேரளாவை சேர்ந்தவர் ஸ்ரீசாந்த். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக ஜொலித்தவர். இவரின் பௌலிங் ஸ்டைலுக்கே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிரடி பௌலிங் மூலம் எதிர் அணியினரின் பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்துவிடுவார்.
3/7
Share
இப்படியாக தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்துடன் இந்திய கிரிக்கெட் அணியில் ஜொலித்த ஸ்ரீசாந்த்திக்கு கேட்ட நேரம் ஆரம்பம் ஆனது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
4/7
Share
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஸ்ரீசாந்த் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் இருந்து வெளியே வந்தார்.
5/7
Share
மேட்ச் பிக்ஸிங் பிரச்னை அதோடு முடியவில்லை, ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டப்பட்டதால் பிபிசிஐ அவருக்கு கிரிக்கெட் விளையாட ஆயுள் காலத் தடை விதித்தது. இதனால் இந்திய அணி, ஐபிஎல் என டோட்டலாக கிரிக்கெட்டில் இருந்தே வெளியேறினார்.
6/7
Share
கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் வெளியேறிய ஸ்ரீசாந்த் கடந்த 2013ம் ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த புவனேஸ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஸ்ரீசாந்த் சினிமா, பிசினெஸ் என செம்ம பிஸியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
7/7
Share
இந்த நிலையில் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஸ்ரீசாந்த். ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது ஸ்ரீசாந்த் மனைவி, குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications