Home / Photos
இந்தியன் 2 'காலண்டர்' பாடலில்.. டான்ஸ் ஆடிய அழகி யாருன்னு பாத்தீங்களா? முன்னாள் பிரபஞ்ச அழகியாமே! கவனம் ஈர்க்கும் போட்டோஸ்!
By Chandru
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள இந்திய 2 படத்தின் காலண்டர் பாடல் வெளியாகி செம ட்ரெண்டிங்கில் வலம் வரும் நிலையில் அப்பாடலில் டான்ஸ் ஆடிய அழகி யார் என்பதை ரசிகர்கள் வலைப்போட்டு தேடி வருகின்றனர்.
1/7
Share
இயக்குநர் ஷங்கர் நடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, நடிகர் விவேக், மனோபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2.
2/7
Share
கமல் நடிப்பில் வெளியான இந்தியன் முதல் பாகம் பிரமாண்ட வெற்றிபெற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பக்கத்தை இயக்க இயக்குநர் ஷங்கர் முடிவெடுத்து கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் ஷூட்டிங் தொடங்கப்பட்டது.
3/7
Share
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் எடுக்கப்பட்ட இப்படம் கொரோனா, ஷூட்டிங் ஸ்பாட் மரணம் உள்ளிட்ட சம்பவங்களால் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் நகர்ந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஷூட்டிங் சூடுபிடிக்க படத்தின் அணைத்து காட்சிகளும் எடுக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பை நிறைவு செய்தனர் படக்குழுவினர்.
4/7
Share
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டது. ஏற்கனவே வெளியான கதறல்ஸ் மற்றும் பாரா பாரா பாடல் ரசிகர்களை அதிகம் ஈர்த்து ட்ரெண்டிங்கில் வலம் வந்தது. மேலும் படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்தது.
5/7
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடல் சமீபத்தில் வெளியானது. பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து வரிகளில் சுவி, ஐஸ்வர்யா சுரேஷ் ஆகியோர் பாடியுள்ள காலண்டர் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
6/7
Photo Credit: instagram
Share
காலண்டர் பாடலை காட்டிலும் அப்பாடலில் வரும் அழகி இளைஞர்களை அதிகம் ஈர்த்துவிட்டார். யாருப்பா அந்த நடிகை என ரசிகர்கள் தேடி வந்த நிலையில் அவர், 2017ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற டெமி-லீ டெபோ என்பது தெரியவந்துள்ளது.
7/7
Photo Credit: instagram
Share
டெமி, தென்னாப்ரிக்காவை சேர்ந்த மாடல் அழகி ஆவார். தற்போது இவரின் இன்ஸ்டா பேஜை தேடி கண்டுபிடித்த ரசிகர்கள் டெமியின் புகைப்படங்களுக்கு ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். மேலும் இந்தியன் 2 திரைப்படம் வரும் 12ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications