பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்.. இந்தியாவில் கட்டப்பட்ட கோட்டைகள் பற்றி தெரியுமா? எங்கெல்லாம் போயிருக்கீங்க?
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள் என்னென்ன? எந்தெந்த இடங்களில் கட்டப்பட்டது? என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
கிழக் கிந்திய கம்பெனி, 1608ம் ஆண்டு இந்தியாவில் காலடி வைத்து இங்குள்ள வளங்களை சூறையாடினர். சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொழிற்கூடங்கள் அமைத்து வணிகம் செய்து வந்தனர். அதன் ஒருபகுதியாக பல்வேறு மாநிலங்களில் கோட்டைகள் காட்டினார். அப்படியாக இந்தியாவில் எங்கெல்லாம் கோட்டைகள் உள்ளன என்பதை பார்ப்போம். கடலூர் மாவட்டத்தில் 1690ம் ஆண்டு டேவிட் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. தற்போது இது சரியான பராமரிப்பின்று உள்ளதாக கூறுகின்றனர்.
16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் வேலூர் கோட்டை கட்டப்பட்டது. அதன்பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்கள் அக்கோட்டையை கைப்பற்றி மீண்டும் மறுவடிவம் கொடுத்தனர்.
போர்ச்சுகீசியர்களால் 1505ம் ஆண்டு கேரளா மாநிலம் கன்னூரில் செயின்ட் ஏஞ்சலோ கோட்டை கட்டப்பட்டது. அதைப்பின்னர் 18நுற்றாண்டில் ஆங்கிலேயர்கள் அக்கோட்டைக்கு மறுவடிவம் கொடுத்தனர்.
1696ம் ஆண்டு கட்டப்பட்ட கோட்டை செயின்ட் வில்லியம்ஸ், 18ம் நுற்றாண்டில் ஆங்கிலேயர்கள் மறுவடிவம் பெற்றது. வில்லியம்ஸ் கோட்டை கொல்கத்தாவில் கட்டப்பட்டுள்ளது.
மெட்ராஸ் மாகாணம் என்று அலைபட்ட சென்னையில், 1644ம் ஆண்டு கிழக் கிந்திய பிரிட்டிஷ் கம்பெனியால் செயின்ட் ஜோர்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இந்தியாவில் கட்டப்பட்ட முதல் ஆங்கிலேயர்கள் கோட்டை இதுவாகும். தற்போது தமிழ்நாடு அரசின் தலைமை செயலகமாக செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications