ஒரு பேரால் கச்சா எண்ணெயில் என்னவெல்லாம் கிடைக்கும்? பாருங்க!
கச்சா எண்ணெய்.. கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒரு பொருளலை கைப்பற்ற தான் அமெரிக்கா பல நாடுகள் மீது போர் தொடுத்து வருகிறது. தற்போது ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து வருகிறது. இதனால் ஈரான் தனது ஹார்முஸ் நீர்வழிப்பாதையை முடியாது. இந்த நீர்வழிப்பாதையில் தான் உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த பாதை மூடப்பட்டதால் உலகளவில் பெட்ரோல் டீசல் பற்றாக்குறை, விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்படியாக மிக முக்கிய பொருளாக கருதப்படும் ஒரு பேரால் கச்சா எண்ணெயில் இருந்து கிடைக்கும் எரிபொருட்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்தால் அதில், 73-75 லிட்டர் பெட்ரோல், 42-45 லிட்டர் டீசல், 15-16 லிட்டர் ஜெட் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் எல்பிஜி (LPG) 7-8 லிட்டர் மற்றும் இதர கெமிக்கல் பொருட்கள் 5 சதவீதம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் கடும் சேரமத்தில் தவித்து வருகின்றனர். பெருநகரங்களில் உள்ள ஹோட்டல்கள் போதிய வணிக சிலிண்டர் இல்லாததால் மூடப்பட்டது. பலர் மீண்டும் விறகடுப்பிக்கு மாறியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் மக்களும் விறகடுப்பிக்கு மாறும் நிலை ஏற்படும்.


Click it and Unblock the Notifications