Saroja Devi: இளமை முதல் முதுமை வரை.. பலரும் பார்த்திடாத சரோஜா தேவியின் போட்டோஸ்!
பழம்பரும் நடிகை சரோஜா தேவி, உடல் நலக்குறைவாலும், வயது மூப்பு காரணமாகவும் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் இன்று உயிரிழந்தார். அவரின் வயது 87. தற்போது இவரின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1955ம் ஆண்டு மகாகவி காளிதாஸ் என்ற கன்னட படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை சரோஜா தேவி. அதனை தொடர்ந்து 1956ம் ஆண்டு ஜெமினி கணேஷன் நடிப்பில் வெளியான 'திருமணம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
1958ம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான 'நாடோடி மன்னன்' படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென மிக பெரிய இடத்தை உருவாக்கிக்கொண்டார்.
எம்ஜிஆர், சிவாஜி கணேஷன், ஜெமினி கணேஷன் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். ரசிகர்களால் அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என கொண்டாடப்பட்டார்.
70 ஆண்டுகால சினிமா பயணித்தில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளார்.
சரோஜா தேவியின் உண்மையான பெயர் 'ராதாதேவி கவுடா' என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர் உடன் மட்டும் 26 படங்களும், சிவாஜியுடன் மட்டும் 22 படங்களும், ஜெமினி கணேசனுடன் 17 படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் சூர்யா, நயன்தாரா நடிப்பில் 2009ல் வெளிவந்த 'ஆதவன்' என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கமலை ரகசியம், சபாஷ் மீனா, பாகப் பிரிவினை, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, ஆலயமணி ஆகிய படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்த படங்கள் என்று சொல்லலாம்.
இவர், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் வென்றுள்ளார்.


Click it and Unblock the Notifications