ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பழங்கள், காய்கறிகள்.. என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
நாம் வாங்கும் பழங்கள், காய்கறிகளும் ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் என நினைக்கும் நபரா நீங்க? உங்களுக்கான பதிவு தான் இது? நாம் வாங்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் எப்போதும் ஃப்ரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியம் இல்லை.. சில பழங்கள், காய்கறிகளை ரூம் வெப்பநிலையில் வைப்பதே நல்லது. அந்த வகையில் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பழங்கள், காய்கறிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத உணவு பொருட்களில் முதல் இடத்தில் உருளைக்கிழங்கு உள்ளது. அப்படியாக நாம் மறந்தும் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் அதில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாறி கிழங்கின் சுவை இனிப்பாக மாறிவிடும். அதில் இருக்கும் சத்துக்கள் நமக்குக்கு முழுமையாக கிடைக்காது.
வெங்காயம்: இத்தனை ரூம் வெப்பநிலையில் வைப்பதே நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்தால் அதன் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு விரைவில் அழிகிவிடும் நிலைக்கு சென்றுவிடும்.
பூண்டு: வெங்காயத்தை போல் பூண்டையும் ரூம் வெப்பநிலையில் வைப்பது நல்லது. அதனை ஃப்ரிட்ஜில் வைத்தால் சீக்கிரம் முளைத்துவிடும். அதேபோல் உரித்த பூண்டை வெளியில் வைக்கக்கூடாது. அதனை ஒரு டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
தக்காளி: முழுமையாக பழுத்த தக்காளியை ரூம் வெப்பநிலையில் வைப்பது நல்லது. அதனை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதன் சுவையில் மாற்றம் ஏற்படும், அதேபோல் சீக்கிரம் கொளகொளவென மாறிவிடும்.
கத்திரிக்காய்: ஃப்ரெஷ்ஷாக இருக்கும் கத்திரிக்காயை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதன் தன்மை மாறிவிடும். அதன் தோல் கருமையாக மாறி சுவையில் மற்றம் உண்டாகும்.
பழங்களை பொறுத்தவரை பழுக்காத பழங்களை காற்றோட்டமாக ரூம் வெப்பநிலையில் வைப்பது நல்லது. அதன் சுவையில் எந்த மாற்றமும் இருக்காது.
அதேபோல் பழுத்த நிலையில் இருக்கும் பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஃப்ரிட்ஜில் வைப்பதால் நீண்ட நாள் ஃப்ரெஷ்ஷாக இருக்க உதவும்.



Click it and Unblock the Notifications