Home / Photos
மாடர்ன் லுக்கில் தெறி போஸ்.. ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்த சுந்தரி சீரியல் நாயகி!
By Chandru
சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: instagram@gabrella sellus
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு சீசன் 5' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். காமெடி காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்த இவர், வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்தார்.
2/5
Photo Credit: instagram@gabrella sellus
Share
படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்த இவர், சின்னத்திரையில் லீட் ரோலில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியலில் நாயகியாக நடித்து இல்லத்தரசிகள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
3/5
Photo Credit: instagram@gabrella sellus
Share
சுந்தரி சீரியலில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடித்து மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றார். சின்னத்திரையில் ஜொலித்த இவர், ஒளிப்பதிவாளர் ஆகாஷை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் குழந்தையையும் பெற்றெடுத்தார்.
4/5
Photo Credit: instagram@gabrella sellus
Share
திருமணத்திற்கு பின் குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வரும் இவர், சோசியல் மீடியாக்களில் தனது இருப்பை புகைப்படங்கள் மற்றும் ரீல் மூலம் பதிவு செய்து வருகிறார். அதேவேளையில் சீரியலில் ஹோம்லி லுக்கில் இருந்த கேப்ரியல்லா, சட்டென மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
5/5
Photo Credit: instagram@gabrella sellus
Share
மாடர்ன் உடையில் கிளாமர் லுக்கில் கலக்கிக்கொண்டிருக்கும் இவர், தற்போது குட்டி உடையில் மிரர் செல்ஃபி எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications