Home / Photos
ரீ ரிலீஸான கில்லி, படையப்பா, மங்காத்தா.. வசூலில் யார் டாப்?
By Chandru
தியேட்டரில் ரீ ரிலீஸான விஜய்யின் கில்லி, ரஜினியின் படையப்பா மற்றும் அஜித்தின் மங்காத்தா ஆகிய படங்கள் ரீ ரிலீஸில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: filmibeat
Share
ஸ்டார் நடிகர்களின் சமீபத்திய திரைப்படங்கள் பெருமளவில் கைகொடுக்காத நிலையில் அவர்களின் ஹிட்டான பழைய படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து ரசிகர்களை எப்போதும் எங்கேஜிங்காக வைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றனர்.
2/5
Photo Credit: filmibeat
Share
தியேட்டரில் ரீ ரிலீஸான கில்லி, படையப்பா மற்றும் மங்காத்தா ஆகிய ஸ்டார் நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸில் எவ்வளவு வசூல் செய்தது. யாருடைய படம் அதிகம் வசூல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது என்பதை வாங்க பார்ப்போம்.
3/5
Photo Credit: filmibeat
Share
விஜய் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'கில்லி'. அப்போதே 38 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்ற இப்படம், கடந்த 2024ம் ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போதும் கிட்டத்தட்ட 32 கோடி ரூபாய் வசூல் செய்து ரீ ரிலீஸ் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை செய்தது.
4/5
Photo Credit: filmibeat
Share
கில்லி வெற்றியை தொடர்ந்து ரஜினியின் படையப்பா ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரஜினி, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான மெகா ஹிட் திரைப்படமான 'படையப்பா' அப்போது 63 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மெகா ஹிட்டானது. 26 ஆண்டுகள் கடந்த படையப்பா, கடந்தாண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. சுமார் 18 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தியது.
5/5
Photo Credit: filmibeat
Share
ரீ ரிலீஸ் ட்ரெண்டில் அஜித்தும் களமிறங்கினார். 2011ல் அஜித்தின் 50வது படமாக 'மங்காத்தா' ரிலீஸானது. உலகளவில் 83 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மெகா ஹிட் கொடுத்த மங்காத்தா, மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்க ரீ ரிலீஸானது. கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி கோலாகலமாக ரீ ரிலீஸான மங்காத்தா, சுமார் 21.5 கோடி ரூபாய் வசூல் செய்து மீண்டும் மெகா ஹிட்டாகியுள்ளது. இருப்பினும் கில்லியின் ரீ ரிலீஸ் சாதனையை முறையடிக்க முடியவில்லை. இதன் மூலம் விஜய்யின் கில்லி திரைப்படம் அதிகம் வசூல் செய்து ரீ ரிலீஸில் நம்பர் ஒன் ஹிட் திரைப்படமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications