Home / Photos
கோட் ரிலீஸ்.. அலப்பறையில் இறங்கிய கேரள விஜய் ரசிகர்கள்.. செலிப்ரேஷன் கிளிக்ஸ்!
By Chandru
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை விட கேரளாவில் விஜய்க்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். விஜய் படம் தியேட்டரில் ரிலீசாகும் போதெல்லாம் கேரளாவில் திருவிழா தான். அந்தளவுக்கு விஜயின் படத்தை கொண்டாடுவார்கள். அந்தவகையில் இன்று விஜயின் கோட் திரைப்படம் கேரளாவில் அதிகாலை 4 மணிக்கே ரிலீஸாகியுள்ளது. கேரளா விஜய் ரசிகர்கள் கோட் திரைப்படத்தை கொண்டாடி வரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/6
Share
கேரளாவில் விஜயின் கோட் திரைப்படம் அதிகாலை 4 மணிக்கே ரிலீசாகி கலைக்கட்டியுள்ளது.
2/6
Share
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கேரளா விஜய் ரசிகர்கள் தியேட்டரின் முன் கொண்டாடி வருகின்றனர்.
3/6
Share
இப்படத்துடன் சினிமாவுக்கு பாய் சொல்லிவிட்டு அரசியலுக்கு செல்லவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
4/6
Share
அதிலும் கோட் படத்தின் விஜய், மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதால் இமயமலை எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
5/6
Share
பிரமாநிலங்களில் ஏற்கனவே கோட் திரைப்படம் ரிலீசான நிலையில் தமிழ்நாட்டில் 9 மணிக்கு ரிலீசாகவுள்ளது. கொண்டாட்டங்களை நடத்த ரசிகர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
6/6
Share
கேரளாவில் ரிலீசான கோட் திரைப்படத்திற்கு அதிகப்படியான பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டு விஜய் ரசிகர்களின் ரியாக்ஷன் என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications