Home / Photos
PHOTOS : கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்கள்.. அஜித், விஜய்க்கு எந்த இடம்? லிஸ்ட் இதோ..
By Chandru
கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.இந்த பட்டியலில் பாலிவுட் பிரபலங்கள் பலர் முதல் பத்து இடத்தில் இடம் பெற்றுள்ளனர்.
1/8
Share
கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.இந்த பட்டியலில் பாலிவுட் பிரபலங்கள் பலர் முதல் பத்து இடத்தில் இடம் பெற்றுள்ளனர்.
2/8
Share
கூகுள் நிறுவனம் ஒவ்வொரு வருடம் இறுதியில் உலகளவில் கூகுள் சேர்ச் என்ஜினில் கூகுள் பயனாளர்கள் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிடும்.இதில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள், அரசியல் வாதிகள், விளையாட்டு வீரர்கள் என பல பிரிவுகள் அடங்கும்.
3/8
Share
தற்போது 2022 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் கூகுள் நிறுவனம் உலகளவில் அதிக தேடப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ஹாலிவுட் நடிகர் ஜொனி டெப்.இவரைத்தொடர்ந்து வில் ஸ்மித் உள்ளிட்ட பலர் இடம் பிடித்துள்ளனர்.
4/8
Share
அந்தவகையில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் ஆசிய அளவில் கொரியாவை சேர்ந்த பாடகர் BTS V முதல் இடத்தை பிடித்துள்ளார்.
5/8
Share
மேலும் இந்தியாவை சேர்ந்த நடிகை கத்ரீனா கைஃப் ஏழாம் இடத்திலும், ஆலியா பட் எட்டாவது இடத்திலும், பிரியங்கா சோப்ரா ஒன்பதாவது இடத்திலும் மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி பத்தாம் இடத்திலும் உள்ளார்.
6/8
Share
முதல் 10 இடங்களில் பாலிவுட் நடிகர்கள் இடம் பிடித்த நிலையில் தென்னிந்திய நடிகர்களின் நிலை என்னவென்று பார்ப்போம் : இந்த டாப் 100 பட்டியலில் வெறும் ஐந்து தென்னிந்திய நடிகர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.
7/8
Share
இந்த டாப் 100 பட்டியலில் நடிகர் விஜய் 15வது இடத்தில் உள்ளார்.2021 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில் விஜய் 19வது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.முந்திய வருடத்தை விட இந்த வருடம் விஜயின் பாப்புலாரிட்டி அதிகமாகியுள்ளது என தெரிகின்றது.
8/8
Share
விஜய்யை தொடர்ந்து நடிகர் சூர்யா 45வது இடத்திலும், நடிகர் தனுஷ் 46வது இடத்திலும் உள்ளனர்.முந்தைய வருடம் டாப் 100 பட்டியலில் இடம் பிடிக்காத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 68வது இடத்திலும், நடிகர் அஜித் 78வது இடத்திலும் உள்ளனர்.மேலும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகள் யாருக்கும் இந்த டாப் 100 பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications