அமோக வரவேற்பு பெற்ற ஃபீல் குட் திரைப்படம்.. 'ஹபீபி' ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் பார்க்கலாம்?
சினிமா ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்ற 'ஹபீபி' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. வாங்க எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஹபீபி: மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா நடிப்பில் கடந்த ஜூன் 12ம் தேதி தியேட்டரில் ரிலீஸான திரைப்படம் 'ஹபீபி'.
படக்குழு: ஈஷா, மாளவிகா மனோஜ், தன ஸ்ரீ உட்பட பல அறிமுக நடிகர்கள் பலர் நடிப்பில் உருவானது. இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இஸ்லாமியர்களின் வாழ்வியல்: தமிழ் இஸ்லாமியர்களின் யதார்த்தமான வாழ்வியலை கூறும் ஃபீல் குட் திரைப்படம். அதேபோல் குடும்ப சுமை காரணமாக பிழைப்பை தேடி வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோரின் கடினமான வாழ்வியலை கூறும் படமாகவும் உருவாக்கப்பட்டது.
எதார்த்தமான கதைக்களம்: காதல் கதை, குடும்ப பிணைப்பு, இஸ்லாமிய குடும்பங்களின் வெளிநாட்டு வாழ்க்கை ஆகியவற்றை இப்படம் எதார்த்தமாக கூறியுள்ளது.
சூப்பர் ஹிட்: தியேட்டரில் ரிலீசான இப்படம், ரசிகர்களின் அமோக வரவேற்பு பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் விமர்சனத்திலும், வசூலிலும் அமோக வரவேற்பு பெற்றது.
ஓடிடி: தியேட்டரில் ஹிட்டான இப்படம், இரண்டு மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. ஹபீபி திரைப்படம் இன்று செப் 25ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. இந்த வீக் எண்டு குடும்பத்துடன் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.



Click it and Unblock the Notifications