Home / Photos
விவாகரத்துக்கு பின் கோவிலுக்கு சென்ற நடிகை ஹன்ஷிகா.. லைக் போட்ட த்ரிஷா.. போட்டோவை பாத்தீங்களா!
By Chandru
நடிகை ஹன்ஷிகா காதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில் மன அமைதிக்காக கோவிலுக்கு சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/7
Photo Credit: instagram@Hansika Motwani
Share
ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஹன்ஷிகா. பின்னர் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடன்கிர்த்து வெவ்வேறு மொழிகளில் கலக்கிக்கொண்டிருந்த இவர், தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.
2/7
Photo Credit: instagram@Hansika Motwani
Share
தமிழில் என்ட்ரி கொடுத்த முதல் படமே இவரை மிகவும் பிரபலமாகியது. முதல் படத்திலேயே இளைஞர்கள் கூட்டத்தை ஈர்க்கத் தொடங்கினார். தொடர்ந்து விஜய்யின் வேலாயுதம், சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, சூர்யாவின் சிங்கம் 2, கார்த்தியின் பிரியாணி என ஸ்டார் நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலிக்கத் தொடங்கினார்.
3/7
Photo Credit: instagram@Hansika Motwani
Share
சப்பியாக இருந்த ஹன்ஷிகா திடீரென தனது உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டார். எடையை குறைத்தது அவருக்கு ஆரோக்கியமாக இருந்தாலும் ரசிகர்களை அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பட வாய்ப்புகளும் முன்பு இருந்தது போல் இல்லை என்று சொல்லலாம்.
4/7
Photo Credit: filmibeat
Share
பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் சொஹைல் கதூரியா என்பவரை கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரமாண்டமாக காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் வெகேஷன் செல்வதும், ஒன்றாக ரீலிஸ் பதிவிடுவதும் என ஜாலியாக இருந்து வந்தனர்.
5/7
Photo Credit: instagram@Hansika Motwani
Share
"யாரு கண்ணு பட்டுச்சோ" இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஒன்றரை வருடம் பிரிந்தே வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
6/7
Photo Credit: instagram@Hansika Motwani
Share
விவாகரத்து பின் பொதுவெளியில் தொடங்கரிய ஹன்ஷிகா தனது அம்மாவுடன் அம்ரிஸ்டரில் உள்ள பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@Hansika Motwani
Share
ஹன்ஷிகா தனது அம்மாவுடன் பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அந்த பதிவுக்கு நடிகை த்ரிஷா லைக் பட்டனை தட்டியுள்ளார். தற்போது இந்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications