குடும்பங்கள் கொண்டாடும் 'ஹேப்பி ராஜ்' திரைப்படம்.. வீக் எண்டு வசூல் எவ்வளவு?
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 'ஹேப்பி ராஜ்' திரைப்படம் வீக் எண்டில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை பார்ப்போம்.
படக்குழு: இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 27ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படம் 'ஹேப்பி ராஜ்'. நாயகியாக ஸ்ரீகவுரி பிரியா நடிக்க, ஜோர்ஜ் மரியன், அப்பாஸ், கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
கதை: ஜோர்ஜ் மரியனுக்கு பல வருடங்களுக்கு பிறகு ஜிவி பிரகாஷ் பிறக்கிறார். இதனால் ஜிவி பிரகாஷ் மீது அளவுகடந்த பாசம் அன்பு காட்டி ஜோர்ஜ் மரியன் வளர்க்கிறார். இருப்பினும் தந்தையின் அன்பை கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை, ஜிவி பிரகாஷ்.
ஜோர்ஜ் மரியனின் உருவத்தை ஊர் மக்கள் சிலர் கிண்டல் செய்ய அதனை மகனாக ஜிவி பிரகாஷ் தட்டிக்கேட்காமல் அப்பாவிடம் இருந்து விலகி இருக்க முடிவு செய்கிறார். இதனால் பெங்களூருவில் நண்பர்களுடன் வாழ முடிவு செய்கிறார்.
பெங்களூருவில் வேலைக்கு சென்ற இடத்தில் ஸ்ரீகவுரி பிரியா மீது காதல் வர இருவரும் காதலிக்க தொடங்குவிடுகின்றனர். இந்த காதல் கதை ஸ்ரீகவுரி பிரியாவின் அப்பாவான அப்பாஸுக்கு தெரியவர அவர் சம்மதம் தெரிவிக்கிறார்.
இருவரின் குடும்பமும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்த சமயத்தில் ஜோர்ஜ் மரியனுக்கும், அப்பாஸுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலால் ஜிவி பிரகாஷின் திருமணம் நடைபெறுமா? இல்லையா? இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? என்பதே இப்படத்தின் சுவாரசிய கதைக்களம்.
வசூல்? இளைஞர்கள் முதல் குடும்ப ஆடியன்ஸ் வரை அனைவரையும் ஈர்த்து வரும் ஹேப்பி ராஜ் திரைப்படம் தியேட்டரில் ரிலீசான மூன்று நாட்களில் 3.16 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications