Home / Photos
லோகேஷ் கனகராஜ் தங்கையா இவங்க? ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்காங்களே.. ஷாக்கான ஃபேன்ஸ்!
By Chandru
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தங்கை புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/9
Photo Credit: instagram
Share
சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். குறுகிய காலத்திலேயே தனது அற்புதமான படைப்புகளின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிகர்களும், தயாரிப்பாளர்களும் இவரின் கால்ஷீட்டுக்காக மாதக்கணக்கில் வெயிட் செய்து வருகின்றனர்.
2/9
Photo Credit: instagram
Share
2017ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் இவரின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. இவரிடம் எதோ இருக்கிறது என ரசிகர்களை லோகேஷை ஃபாலோ செய்ய ஆரம்பித்தனர்.
3/9
Photo Credit: instagram
Share
அப்படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை கொடுத்தார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது என்று சொல்லலாம். காரணம் முந்தய படத்தின் வெற்றியே. கைதி படம் வெளியாகி மெகா ஹிட்டானது.
4/9
Photo Credit: instagram
Share
ரசிகர்களின் எதிர்பார்ப்பை விடவும் அதிகமாக கொடுத்து ரசிகர்களை வாயடைக்க செய்துவிட்டார். தமிழ் சினிமாவையே மிரளவைத்துவிட்டார் லோகேஷ். வசூலிலும், விமர்சனம் ரீதியாகவும் இப்படம் விண்ணை தொட்டது. இப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களே லோகேஷுக்காக காத்திருக்க தொடங்கினர்.
5/9
Photo Credit: instagram
Share
அந்தவகையில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய்யுடன் அணைத்து மாஸ்டர் என்ற படத்தை கொடுத்தார். இப்படத்தில் இருந்து எல்சியூ என்ற புது வார்த்தை தமிழ் சினிமாவில் உலா வர தொடங்கியது. அதாவது ஒவ்வொரு புது படத்துக்கும் பல படத்தின் லிங்க் இருக்கும் என்பதே பொருள். இதனை லோகேஷ் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார்.
6/9
Photo Credit: instagram
Share
மாஸ்டர் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். கமலின் சூப்பர் ஹிட் படங்களின் லிஸ்டில் இப்படமும் இணையும் அளவுக்கு விக்ரம் படத்தின் வெற்றி சூப்பர் டூப்பராக இருந்தது. விக்ரம் படத்தின் இமாலய வெற்றிக்காக லோகேஷுக்கு விலை உயர்ந்த சொகுசு காரை பரிசளித்தார் கமல்.
7/9
Photo Credit: instagram
Share
பின்னர் மீண்டும் விஜய்யுடன் அணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் சூப்பர் டூப்பர் என சொல்லாவிட்டாலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படியாக தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் வெறும் 5 படங்கள் மட்டுமே கொடுத்து தவிர்க்கமுடியாத இயக்குநராக வலம் வருகிறார் லோகேஷ்.
8/9
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் லோகேஷுக்கு தங்கை ஒருவர் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு செம்ம ஷாக் கொடுத்துள்ளது. அதன்படி அவரின் பெயர் அவந்திகா கனகராஜ் என்றும் லோகேஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறார்.
9/9
Photo Credit: instagram
Share
அதேபோல் நேற்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜுக்கு புகைப்படத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் அவந்திகா கனகராஜ். இந்த நிலையில் அவந்திகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications