Home / Photos
நீதா அம்பானியின் சகோதரியை பாத்துருக்கீங்களா? அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல் இருக்காங்களே!
By Chandru
முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியின் சகோதரியின் புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இணையத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
1/7
Share
உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி பற்றி தான் உலகம் முழுவதும் பேசப்பட்டது.
2/7
Share
ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கு உலகின் முன்னணி தொழிலதிபர்கள், பாலிவுட் ஸ்டார் நடிகர்கள், தென்னிந்திய நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் பில்கேட்ஸ், மார்க் சகன்பர்க் போன்ற முன்னணி நிறுவனத்தின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த விழாவில் உலகின் முன்னணி பாப் பாடகி ரிஹானாவின் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இவருக்கு சுமார் 40 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
3/7
Share
இப்படியாக சுமார் மூன்று நாட்கள் திருவிழாவாக ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் தனது வருங்கால மருமகள் ராதிகாவுக்கு கோடி ரூபாய் பொருட்களை பரிசளித்தார் நீதா அம்பானி. இந்த நிலையில் இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் நீதா அம்பானியை போலவே மற்றொருவர் தென்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
4/7
Share
ஆம், அவர் வேறு யாரும் இல்லை நீதா அம்பானியின் சகோதரி தானாம்.. பார்ப்பதற்கு நீதா அம்பானியை போலவே இருக்கும் அவரின் சகோதரி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். இவரின் பெயர் மம்தா தலால். நீதா அம்பானியின் கூடப்பிறந்த சகோதரியாம். இவரை பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பொதுவெளியில் அதிகம் தென்படாததால் பெரும்பாலானோருக்கு இவரை தெரியாது.
5/7
Share
நீதா அம்பானியாவை விட 4 வயது இளையவரான மம்தா, திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் முன்னணி பிரபலங்களில், கோடீஸ்வரர்களின் குழந்தைகள் மட்டுமே படிக்கின்றனர்.
6/7
Share
ஷாருக்கானின் பிள்ளைகள் இங்கு தான் கல்வி பயின்றவர்கள், அதேபோல் அம்பானி விட்டு பிள்ளைகளும் இங்கு தான் கல்வி பயின்று வருகின்றனர். திருபாய் அம்பானி பள்ளியை சிறந்த முறையில் வழிநடத்தி வருகிறார் மம்தா தலால்.
7/7
Share
பெரும்பாலும் ஊடகங்களில் இருந்து தன்னை தனிமைப்படித்துக்கொள்ளும் மம்தாவின் புகைப்படங்கள் சில வெளியாகி நெட்டிசன்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. பார்ப்பதற்கு நீதா அம்பானியை போலவே இருப்பதால் சற்று குழம்பிப் போயினர். தற்போது மம்தாவின் சில புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி தீயாக பரவி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications