Home / Photos
அவகேடோ பழம் பிடிக்குமா? அதில் உள்ள நன்மைகள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
By Chandru
ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் அவகேடோ. அதிலும் குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: BOLDSKY
Share
அவகேடோ பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் அவை குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. குடலில் உள்ள நல்ல பாக்டிரீயாக்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து உடலுக்கு நன்மை பயக்கும் வளர்ச்சிதை மாற்றங்களை உருவாகின்றன.
2/5
Photo Credit: BOLDSKY
Share
நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை நம் அன்றாட டயட்டில் எடுத்துக்கொண்டால் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று கூறுவார்கள். அந்த வகையில் அவகேடோவில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் மலசிக்கல் உட்பட வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. ஒரு பழத்தில் 14 கிராம் நார்ச்சத்து உள்ளதாக கூறுகின்றனர்.
3/5
Photo Credit: BOLDSKY
Share
அவகேடோ பழத்தை அடிக்கடி எடுத்துக்கொண்டால் அவை புற்றுநோய் அபாயத்தில் இருந்து நம்மை காக்கும் என்று கூறுகின்றனர். குறிப்பாக ஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
4/5
Photo Credit: BOLDSKY
Share
அவகேடோ பழத்தில் உள்ள நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு, ஆக்ஸிஜனேற்றி உள்ளிட்டவை நம் உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது. புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.
5/5
Photo Credit: BOLDSKY
Share
ஆரோக்கியமான அவகேடோ பழத்தை ஜூஸாகவும், சாலட், சாண்ட்விச் போன்று காலை உணவாகவும் சாப்பிடலாம். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆலோசனையுடன் இந்த பழத்தை எடுத்துக்கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications