Home / Photos
முடி வளர்ச்சிக்கு உதவும் ஆலிவ் ஆயில்.. கருகருனு நீளமா வளர.. இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க!
By Chandru
ஆலிவ் ஆயிலில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை உடல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து கிரேக்கம், எகிப்து நடக்குகளில் ஆலிவ் எண்ணெயை சமையலுக்கும், சரும ஆரோக்கியத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். இதில் அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு, ஆன்டிஆக்சிடன்ட் உள்ளதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அந்தவகையில் ஆலிவ் ஆயில் முடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. அதன்படி இந்த ஆலிவ் எண்ணெயை முடி வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Share
சிறு வயதில் இருந்து தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்து பழகிய நாம் கொஞ்சம் ஆலிவ் எண்ணெயை ட்ரை செய்து பார்ப்போமே.. ஆலிவ் எண்ணெயில் அதிகளவு வைட்டமின் ஈ சத்து இருப்பதால் இது முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை கொடுத்து முடியை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்கிறது.
2/6
Share
அடர்த்தியான கூந்தலை பெற வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலைமுடியில் தடவவேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.
3/6
Share
ஆலிவ் எண்ணெயில் முட்டையை கலந்து பயன்படுத்தினால் முடி வளர்ச்சி அடர்த்தியாக இருக்கும். முட்டையில் ப்ரோடீன் சத்து அதிகளவு இல்லத்தில் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் போது முடி வளர்ச்சி அமோகமாக இருக்கும்.
4/6
Share
முட்டை+ஆலிவ் எண்ணெய் மிக்ஸ்: முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவேண்டும். இந்த கலவையை ஹேர் மாஸ்க் போல் தலைமுடியில் பயன்படுத்தவேண்டும். பின்னர் அரை மணி நேரம் கழித்து முடியை தண்ணீர் கொண்டு கழுவிவிடவேண்டும்.
5/6
Share
வாழைப்பழம்+ஆலிவ் எண்ணெய்: முட்டையை வைத்து மாஸ்க் செய்தது போல் ஆலிவ் எண்ணெயையும் வாழைப்பழத்தையும் சேர்ந்த கலவையை ரெடி செய்துகொள்ளவேண்டும். அதனை ஹேர் மாஸ்க் போல் பயன்படுத்தி அரை மணிநேரம் கழித்து கிளீன் செய்துவிடவேண்டும். வாழைப்பழம் பயன்படுத்துவதால் முடி அடர்த்தியாக வளர உதவும்.
6/6
Share
கற்றாழை+ஆலிவ் எண்ணெய்: முந்தய செய்முறை போல் காற்றாலையையும் ஆலிவ் எண்ணையுடன் சேர்த்து தலைமுடியில் மாஸ்க் போல் பயன்படுத்தவேண்டும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தி வந்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications