Home / Photos
PHOTOS: கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகள்.. குழந்தைகளுக்கு இதை கண்டிப்பா கொடுங்க.. நோ சொல்லவே மாட்டாங்க! ஹெல்த்தி டிப்ஸ்!
By Divya Bala
ஒரு மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் கண்டிப்பாக கால்சியம் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு தெரிந்த எலும்பு வளர்ச்சி மட்டுமில்லாமல் பற்கள், நரம்பு மண்டலம், செரிமானம், இதயம் என அனைத்திற்கும் கால்சியத்தின் அவசியம் தேவை. நாம் அனைவர்க்கும் தெரிந்தது பாலில் அதிகம் கால்சியம் இருக்கு அதை குடித்தால் போதும், ஆனால் சில குழந்தைகளோ அல்லது பெரியவர்களோ பாலை பிடிக்காது என்று சொல்கிறார்கள். அதற்கான மாற்று வழி இதுதான் இவற்றில் பாலை விட அதிக கால்சியம் இருக்கின்றன. அதற்கு பதிலாக இதை ட்ரை பண்ணுங்க.
1/9
Photo Credit: Boldsky
Share
ஒரு மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் கண்டிப்பாக கால்சியம் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு தெரிந்த எலும்பு வளர்ச்சி மட்டுமில்லாமல் பற்கள், நரம்பு மண்டலம், செரிமானம், இதயம் என அனைத்திற்கும் கால்சியத்தின் அவசியம் தேவை. நாம் அனைவர்க்கும் தெரிந்தது பாலில் அதிகம் கால்சியம் இருக்கு அதை குடித்தால் போதும், ஆனால் சில குழந்தைகளோ அல்லது பெரியவர்களோ பாலை பிடிக்காது என்று சொல்கிறார்கள். அதற்கான மாற்று வழி இதுதான் இவற்றில் பாலை விட அதிக கால்சியம் இருக்கின்றன. அதற்கு பதிலாக இதை ட்ரை பண்ணுங்க.
2/9
Photo Credit: Boldsky
Share
யோகுர்ட்: இது பாலிலிருந்து கிடைக்கும் ஒரு பொருள் தான் என்றாலும் இதில் பாலை விட அதிகமான கால்சியம் உள்ளது. உடலின் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த யோகுர்ட் உதவுகின்றன. யோகுர்ட் பாலை விட ஈசியாக செரிமானம் ஆகிவிடும் என்பதால் உடற்பயிற்சி அல்லது விளையாட்டு வீரர்கள் இதை எடுத்து கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு எனெர்ஜி சீக்கிரமாகவே கிடைக்கின்றன. தயிரை விட இதில் புரத சத்தும் அதிமாக இருக்கிறது.
3/9
Photo Credit: Boldsky
Share
டோஃபு : சோயா பீன்ஸிலிருந்து கிடைக்கும் பாலை தயிர் போல கடைந்து எடுக்கப்படட்டும் உணவுதான் இந்த டோஃபு. இதை சாப்பிடுவதால் எலும்பு தேய்மானம் தடுக்கப்படும். கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சி உறுதியாக இருக்க உதவும். இதில் கால்சியம் மட்டுமில்லாமல் பல வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கின்றன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை எடுத்துக்ககொள்வதால் சிறுநீரில் வெளியேறும் புரதம் தடுக்கப்படும். இவை ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைப்பதால் இதய நோய்கள் தடுக்க படுகின்றன.
4/9
Photo Credit: Boldsky
Share
அமர்நாத்/ராஜகீரா: இது பார்ப்பதற்கு கசகச போல இருந்தாலும் அதைவிட பெரிய வடிவில் இருக்கும் தண்டு கீரையின் விதைகள். இவற்றில் அளவுக்கு அதிகமான கால்சியம் சத்துக்கள் இருக்கின்றன. வட இந்தியாவில் இதில் சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு பர்பி செய்து கொடுப்பார்கள். இதில் புரதம் மற்றும் நார்சத்து இருப்பதால் இது பசியை கட்டுப்படுத்தும் உடலை எடை குறைப்பவர்கள் இதை எடுத்து கொள்ளலாம். தோசையுடன் இதை மாவாக அரைத்து சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கட்லெட்டாகவும் செய்து கொடுக்கலாம்.
5/9
Photo Credit: Boldsky
Share
ஆரஞ்சு ஜூஸ்: ஆரஞ்சு ஜூஸ் காலையில் குடிப்பதன் மூலம் வைட்டமின் சி மற்றும் கால்சியம் உங்களுக்கு கிடைக்கும். வைட்டமின் எ சத்துக்களும் இதில் கிடைக்கின்றன. அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது சரியான அளவுக்கு கொண்டு வர உதவுகிறது. உடம்பில் அடிபட்ட காயங்கள் வேகமாக ஆறவும் இது உதவியாக இருக்கிறது. முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. குழந்தையின் 5 மாதத்தில் இருந்தே கொடுக்கலாம் சர்க்கரை சேர்க்காமல் கொடுப்பதால் சளி ஏற்படாமல் இருக்கும்.
6/9
Photo Credit: Boldsky
Share
பச்சை இலை காய்கறிகள்: இவற்றில் அணைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் கால்சியத்தின் அளவும் அதிகமாக இருக்கிறது. கீரை, ப்ரோக்கோலி , டர்னிப் இவற்றில் விட்டமின்கள் மற்றும் கால்சியம் கொட்டி கிடக்கின்றன. தினமும் பச்சை இல்லை காய்கறிகளை ஏதாவது ஒன்றை உணவில் சேர்த்துக்கொள்ளும் கால்சியம் இன்றியமைமல் கிடைக்கும்.
7/9
Photo Credit: Boldsky
Share
அத்தி: அத்தி பழத்தில் ஏகப்பட்ட சத்துக்கள் கொட்டி கிடைக்கிறது. ரத்த அணுக்கள் குறைவாக இருப்பவர்கள் இதை எடுத்து கொள்ளலாம். சரும ஆரோக்கியத்தில் மேம்பாடு தெரியும். ரத்தத்தில் இருக்கும் சக்கரை அளவை குறைக்க உதவும். இதில் இருக்கும் கால்சியம் சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
8/9
Photo Credit: Boldsky
Share
எள்: நீங்கள் சாப்பிடும் பர்கர், சான்விச் பொருட்களில் இந்த வெள்ளை எள்ளை பார்த்திருக்கலாம். இவற்றில் கால்சியம் நிறையவே இருக்கின்றன. இதில் கனிம சத்துக்கள், வைட்டமின்கள் அதிகமாக இருக்கின்றன. இதை நீங்கள் பச்சையாவே இதை சாப்பிடலாம். ஒமேகா 3 சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. இதை சாலட் மேலே தூவி கூட சாப்பிடலாம்.
9/9
Photo Credit: Boldsky
Share
பாதம்: பாதாமில் உடம்பில் உள்ள அத்தனை உடல் பாகங்களுக்கும் உதவும் சத்துக்கள் உள்ளன. உடலில் உள்ள கொழுப்புகள் குறைய பாதம் உதவுகின்றன. தலையில் உள்ள முடி வளர, நியாபக சக்தியை அதிகரிக்க பாதம் உதவுகின்றன. தினமும் 4 பாதம் உட்கொள்வதால் முக சுருக்கங்கள் நீங்கும். இதில் இருக்கும் கால்சியம் சத்துக்களால் எலும்புகள் வலுப்பெற உதவுகின்றன.


Click it and Unblock the Notifications