Home / Photos
உலர் திராட்சை உடலுக்கு அவ்வளவு நல்லது.. ஆனால் இந்த பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது! யார், எதுக்கு?
By Chandru
ட்ரை ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் யாருக்கு தான் பிடிக்காது. பலரின் ஃபேவரைட் ஸ்னாக்காக இருந்து வருகிறது. உடலுக்கு தேவையான ஏகப்பட்ட சத்துக்கள் அதில் நிறைந்துள்ளது. ட்ரை ஃப்ரூட்ஸ் வகைகளில் ஒன்று தான் உலர் திராட்சை. இதனை கிஸ்மிஸ் என்றும் கூறுவார்கள். இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்புசத்து, கரோட்டீன்கள், பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்கள் நேர்ந்துள்ளது. இதனை சிலர் நீரில் ஊறவைத்தும், சிலர் அப்படியே நேரடியாகவும் சாப்பிடுவார்கள். உடலின் ஆரோக்கியத்தை காக்கும் இந்த உலர் திராட்சையை குறிப்பட்ட சிலர் சாப்பிடக்கூடாது என்று சொன்னால் நம்பமுடிகிறதா. ஆம், அதிக சத்துக்கள் நிறைந்த இந்த உலர் திராட்சை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Share
சர்க்கரை நோய்யாளிகள்: நீரிழிவு நோய்யனால் பாதிக்கப்பட்டவர்கள் உலர் திராட்சையை சாப்பிடவேக்கூடாது. கிளைசெமிக் அதிகளவில் இருப்பதால் உலர் திராட்சையை தவிர்ப்பது நல்லது.
2/6
Share
செரிமான பிரச்சனை: அஜீரணம், வயிறு கோளாறு, செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உலர் திராட்சையை எடுத்துக்கொள்வதை குறைப்பது நல்லது. இவை செரிமான பிரச்சனையை அதிகப்படுத்தலாம்.
3/6
Share
கிட்னி பிரச்சனை: கிட்னி பிரச்சனை உள்ளவர்கள் உலர் திராட்சையை சாப்பிடவேக்கூடாது. அதில் உள்ள சில மூலக்கூறுகள் கிட்னி பிரச்சனையை அதிகப்படுத்திவிடும். கல்லடைப்பு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களும் உலர் திராட்சையை தவிர்ப்பது நல்லது.
4/6
Share
குடல் பிரச்சனை: குடல் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் உலர் திராட்சையை தவிர்ப்பது நல்லது. காரணம், உலர் திராட்சையில் அதிகளவு நார்சத்து உள்ளதால் அது குடல் சார்ந்த பிரச்சனையை அதிகப்படுத்திவிடும்.
5/6
Share
அலர்ஜி: பெரும்பாலானோருக்கு இம்மறியான பிரச்சனை வர வாய்ப்பில்லை. இருப்பினும் சிலருக்கு அதிகளவில் உலர் திராட்சையை எடுத்துக்கொண்டால் அலர்ஜி பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
6/6
Share
உலர் திராட்சையை சாப்பிடும் முன் தெரிந்துக் கொள்ளவேண்டியவை:
1. உலர் திராட்சையை சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் நன்றாக ஊறவைக்க வேண்டும்.
2. ஒரே நேரத்தில் அதிகளவு உலர் திராட்சையை சாப்பிடக்கூடாது.
3. மதிய உணவுடன் உலர் திராட்சையை சேர்ந்து சாப்பிட்டால் அதன் பலன் முழுமையாக கிடைக்கும்.
4. 30 வயதை கடந்தவர்கள் 1/2 கப் அல்லது 60 கிராம் அளவிற்கு உலர் திராட்சையை சாப்பிடக்கூடாது.


Click it and Unblock the Notifications