Home / Photos
ஆரோக்கியம் இல்லை என வெறுக்கும் சத்தான உணவுகள் எதுன்னு தெரியுமா? நீங்கள் மிஸ் பண்ணும் உணவுகளின் லிஸ்ட்!
By Chandru
இன்றைய காலகட்டத்தில் கிடைக்கும் அணைத்து உணவுகளும் ஆரோக்கியமானவைகளா என்று கேட்டல் அது கேள்விக்குறி தான். அதன்படி ஆரோக்கியம் இல்லை என வெறுக்கும் ஆரோக்கியமான உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Share
இன்றைய காலகட்டத்தில் எந்த உணவு எடுத்தாலும் அதில் எதோ ஒரு வழியில் கலப்படம் செய்யப்பட்ட உணவுகளாக இருக்கின்றது. ஆரோக்கியம் என நினைக்கும் பல உணவுகள் உடலுக்கு மிக மோசமான வியாதிகளை கொடுக்கும் விஷமாக மாறிவிடுகிறது. உணவில் செய்யப்படும் கலப்படம் மக்களின் மனதையே மத்திவிட்டது என்று சொல்லலாம்.
2/7
Share
ஆம் ஆரோக்கியமான உணவுகளையும் கலப்படம் செய்யப்பட்ட உணவு என நினைத்து அவற்றை ஒதுக்கி விடுகிறோம். இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஒன்றும் கிடைக்காமல் மீண்டும் ஆரோக்கியமற்ற உணவுகளை தேடி செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். அந்தவகையில் நாம் ஆரோக்கியம் இல்லை என நினைத்து ஒதுக்கும் ஆரோக்கியமான உணவுகள் எது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..
3/7
Share
தேங்காய் எண்ணெய்: நம் மக்களுக்கு தலையில் எண்ணெய் வைப்பதோடு முடிந்துவிடும் தேங்காய் எண்ணெயின் வேலை. அதனை வேறு எதற்கும் யூஸ் பண்ணுவதில்லை. தேங்காய் எண்ணெய் நம் அன்றாட டயட்டில் எடுத்துக்கொண்டால் அது நம் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் இரண்டையும் சீராக்கி சமநிலை படுத்தி ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
4/7
Share
முட்டையின் மஞ்சள் கரு: பலருக்கும் முட்டையின் மஞ்சள் கரு பிடிக்காது காரணம் அதில் இருந்து வரும் கவுச்சி வாசனை. சிலர் அதனை விரும்பு சாப்பிடுவார்கள் பலரும் வெள்ளை கருவை மட்டும் சாப்பிட்டுவிட்டு மஞ்சள் கருவை தூக்கி எறிந்துவிடுவார்கள். வெள்ளை கருவில் இருக்கும் சத்துக்களை விட மஞ்சள் கருவில் அதிக சத்துக்கள் நேர்ந்துள்ளது. தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
5/7
Share
பிளாக் டீ: பால் டீ இந்திய அளவில் மிக பெரிய பிஸ்னஸ் ஆக மாறிவிட்டது. தெருவுக்கு தெரு டீ கடைகள் தான். பால் டீ குடிப்பதை விட பிளாக் டீ குடிப்பது மிகவும் நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆமாம் நாம் யார் சொல்லுறத கேக்குறோம் காலை எழுந்தவுடன் முதலில் பல்லில் படுவது பால் டீ தான், இது பல நோய்களை கொண்டு வரும் என கூறுகின்றனர். ஆனால் பிளாக் டீ குடிப்பதனால் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் வராமல் தடுக்கப்படும், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
6/7
Share
உப்பு: உப்பு என்று சொன்னாலே முதலில் நியாபகம் வருவது அளவா யூஸ் பண்ணனும் இல்லை என்றல் கிட்னி பிராப்லம் வந்துவிடும் என்பது தான். ஆனால் இந்து உப்பு எனப்படும் இந்த உப்பு வகையில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே உணவு சமைக்கும் பொது இந்து உப்பு பயன்படுத்துவது ஆரோக்கியத்தை கொடுக்கும்.
7/7
Share
டார்க் சாக்லேட்: சர்க்கரை சேர்க்கப்படாமல் இருக்கும் சாக்லேட் தான் டார்க் சாக்லேட். கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும் அனால் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். டார்க் சாக்லேடில் உள்ள சத்துக்கள் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து உடலில் உள்ள ஹப்பினஸ் ஹார்மோன்ஸை துடிவிடுமாம்.


Click it and Unblock the Notifications