Home / Photos
புற்றுநோய் முதல் சரும பொலிவு வரை.. பல நோய்களுக்கு தீர்வு தரும் மீன் வகைகளும்.. அதன் மருத்துவ நன்மைகள் என்னென்ன.. இதோ பாருங்க!
By Chandru
அசைவ உணவுகளிலேயே அதிக சத்துக்கள் நிறைந்த உணவு மீன்கள். ஒவ்வொரு மீன் வகைகளுக்கும் அதற்கே உரித்தான தனிப்படை மருத்துவ நன்மைகள் உண்டு. அந்தவகையில் நாம் விரும்பி சாப்பிடும் மீன் வகைகளில் எந்தெந்த மீன்களுக்கு என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Share
வாளை மீன்: பசி உணர்வே இல்லாதவர்கள், உடல் மெலிந்தவர்களுக்கு ஏற்ற உணவு இந்த வாளை மீன். உடலில் உள்ள பித்தம் மற்றும் வாதத்தை குறைத்து உடல் ஆரோக்கியத்துக்கு வாளை மீன் உதவுகிறது.
2/6
Share
காரல் மீன்: சளி, ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு காரல் மீன் மருந்தாக உதவுகிறது. இந்த மீனை சூப் வைத்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சனை குணமடையும் என்கின்றனர்.
3/6
Share
நெத்திலி மீன்: பலரின் ஃபேவரைட் மீனாக இருந்து வருவது நெத்திலி. இதில் பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. வயிறு பிரச்சனை, செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. அதேபோல் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் நெத்திலி மீன் உதவுகிறது.
4/6
Share
அயிலை மீன்: இதய ஆரோக்கியத்துக்கு உதவும் மீன் அயிலை. இதயத்தில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. அதேபோல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பையும் குறைகிறது.
5/6
Share
சாளை மீன்: உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மீன் சாளை.
6/6
Share
சூரை மீன்: ஒமேகா 3 கொழுப்பு சத்து, செலினியம் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்த சூரை மீன், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. அதேபோல் இதய ஆரோக்கியத்துக்கும் சூரை மீன் மருந்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications