கதலி முதல் செவ்வாழை வரை.. வாழைப்பழ வகைகளும்.. அதன் ஆச்சரியமூட்டும் நன்மைகளும்.. தெரிஞ்சுக்கோங்க!
இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட பழம் வாழைப்பழம். உலகளவில் ஆயிரக்கணக்கான வாழைப்பழ வகைகள் உண்டு.. அதில் நாம் நாட்டில் அதிகம் தென்படும் வகைகள் என்னென்ன? உடலுக்கு அது செய்யும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பேயன் வாழைப்பழம்: தமிழ்நாடு வாழைப்பழ வகைகளில் ஒன்று பேயன் வாழைப்பழம். உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரும் பழமாக உள்ளது. குடல் புண், மலச்சிக்கலை குணப்படுத்தும். உடல் எடை அதிகரிக்க நினைப்பவரக்ள் தினமும் இந்த பழத்தை எடுத்துக்கொள்ளலாம். இதில் மாவுசத்து அதிகமுள்ளதால் உடல் எடை அதிகரிப்பை கண்கூடாக பார்க்கமுடியும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச்செய்கிறது.
மொந்தன் வாழைப்பழம்: இப்பழத்தில் அதிகளவு மாவுசத்து மற்றும் இரும்புசத்து உள்ளதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடல் சூட்டை குறைக்க மொந்தன் வாழைப்பழத்தை தினமும் உணவு பின் எடுத்துக்கொள்வது நல்லது. மேலும் மலசிக்கல், வயிறு இரைச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும்.
செவ்வாழைப்பழம்: வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், இரும்புசத்து, பீட்டாகரோட்டின் உட்பட பல சத்துக்கள் நிறைந்த பழமாக உள்ளது. தோல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் குணமாகும். கண் பார்வை மேம்பட, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, நரம்புத்தளர்ச்சி நீங்க தினமும் ஒரு செவ்வாழை எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கவும் செவ்வாழை உதவுகிறது.
ரஸ்தாளி வாழைப்பழம்: வாழைப்பழ வகைகளிலேயே அதிக இனிப்பு சுவை கொண்ட பழம் ரஸ்தாளி. இதில் அதிகளவு நார்சத்து உள்ளதால் மலசிக்கல் நீங்க உதவுகிறது. பொட்டாசியம் அதிகளவு உள்ளதால் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்..
பூவன் வாழைப்பழம்: உடலில் செரிமான சக்தியை அதிகரிக்க தினமும் பூவன் பழத்தை உணவுக்கு பின் எடுத்துக்கொள்வது நல்லது. உடல் சோர்வு, தசை வலி நீங்க பூவன் பழம் உதவுகிறது. அதேபோல் சர்க்கரை நோய்யாளிகள், சுவாசப்பிரச்சனை உள்ளவர்கள் இப்பழத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது.
பச்சை வாழைப்பழம்: அதிக குளிர்ச்சி தரக்கூடிய பழம் பச்சை வாழைப்பழம். குளிர்ச்சி உடலமைப்பு கொண்டவர்கள் இப்பழத்தை அதிகளவு எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும். குடல் ஆரோக்கியத்துக்கு இப்பழம் மிகவும் உதவுகிறது.
நேந்திரம் வாழைப்பழம்: கேரளாவில் அதிகளவு விளைவிக்கப்படும் பழம் நேந்திரம் வாழைப்பழம். உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்கள் இப்பழத்தை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது. இரும்பு சத்து நிறைந்த இப்பழம் இதய ஆரோக்கியத்துக்கும், ரத்த உற்பத்திக்கும் உதவுகிறது.
கதலி வாழைப்பழம்: மாவுசத்து அதிகமுள்ள பழம் கதலி வாழைப்பழம். உடல் எடை அதிகரிக்க, மலசிக்கல், குடல் புண், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கதலி வாழைப்பழத்தை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications