நம் உடலில் வைட்டமின் குறைபாடு உள்ளதா? தெரியும் அறிகுறிகள் என்னென்ன? தீர்வை தெரிஞ்சுக்கோங்க!
வைட்டமின் குறைபாடுகளால் உடலில் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன? அதற்கான தீர்வு என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நம் நாக்கில் அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்படுவது போல் உணர்வு இருந்தால் அது வைட்டமின் பி குறைபாட்டுக்கான அறிகுறியாக இருக்கலாம். இதற்கான தீர்வாக முட்டை, பால் பொருட்கள், மீன் ஆகிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் அது வைட்டமின் சி குறைபாடுக்கான அறிகுறியாக இருக்கலாம். இதற்கான தீர்வாக சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், உருளைக்கிழங்கு ஆகிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
எப்போதும் சோர்வாக உணர்வது வைட்டமின் டி குறைபாடுக்கான அறிகுறியாக இருக்கலாம். இதற்கான தீர்வாக கொழுப்பு சத்து உடைய மீன்கள், முட்டை, ஈரல் ஆகிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அது ஈரல் சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அவ்வாறு இருந்தால் உடனே மருத்துவரை பார்த்து பிரச்சனைக்கான தீர்வை பெறவேண்டும். மேலும் கீரை வகைகள், மீன்கள், நட்ஸ் வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.
விரல்களில் உணர்ச்சி இல்லாமை அல்லது மரத்துப்போதல் ஆகிய அறிகுறிகள் வைட்டமின் பி12 குறைபாட்டுக்கான அறிகுறியாக இருக்கலாம். இதற்கான தீர்வாக முட்டை, பால் பொருட்கள், மீன் ஆகிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
அடிக்கடி கால் வீக்கம் ஏற்பட்டால் அது இதயம் அல்லது சிறுநீரகம் சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். அவ்வாறு அவ்வப்போது கால் வீக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.
அடிக்கடி முடி கொடுத்தா? அப்போ அது இரும்புசத்து குறைப்பாடாக இருக்கலாம். மாமிசம், மீன், முட்டை, நட்ஸ், கீரை வகைகள் ஆகிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
காதில் அடிக்கடி ரிங் என்ற சத்தம் கேட்குதா? அப்போது அது அதிக ரத்த அழுத்தத்திற்காக அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
வாய் துர்நாற்றத்திற்கான அறிகுறியாக வயிறு, குடல் சார்ந்த பிரச்சனைகள் இருக்கலாம் என கூறுகின்றனர். அவ்வாறு இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.


Click it and Unblock the Notifications