Home / Photos
நோய்களுக்கு நோ சொல்லும் நெல்லிக்காய்.. ஆனால் இவங்க மட்டும் மறந்தும் சாப்பிட்ராதீங்க!
By Chandru
நெல்லிக்காய் உடலுக்கு அவ்வளவு நல்லது. தினமும் ஒரு நெல்லைக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக நெல்லிக்காய் உள்ளது. வைட்டமின் சி, இரும்பு சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட ஏகப்பட்ட சத்துக்கள் நெல்லிக்காயில் நிறைந்துள்ளது. இப்படியான இந்த நெல்லிக்காயை சிலர் மட்டும் சாப்பிடவே கூடாது என்கின்றனர். யாரெல்லாம் நெல்லிக்காயை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Share
மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. நெல்லிக்காயை சாப்பிடுவது இரத்த போக்கை அதிகப்படுத்தும் என கூறுகின்றனர்.
2/6
Share
இரத்தத்தில் குறைந்த சர்க்கரை அளவு கொண்டவர்கள் நெல்லிக்காயை சாப்பிடவே கூடாது. இது இரத்தத்தின் சர்க்கரை அளவை வேகமாக குறைக்கும் தன்மை உடையது.
3/6
Share
ட்ரை ஸ்கின் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். இது சருமத்தின் வறட்சியை மேலும் அதிகப்படுத்திவிடும்.
4/6
Share
இரத்த சம்மந்தமான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்காயை தவிர்ப்பது நல்லது. நெல்லிக்காய் உடலுக்கு நல்லது என்றாலும் அதில் உள்ள சத்துக்கள் இரத்த சம்மந்தமான நோயினால் அவதிப்படுபவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
5/6
Share
நெஞ்சு எரிச்சல், அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை தவிர்த்திடுங்கள். நெல்லிக்காய் செரிமானத்துக்கு உதவுகிறது என்றாலும் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.
6/6
Share
நெல்லிக்காயில் குளிரூட்டும் தன்மை உள்ளதால் சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் அதனை தவிர்ப்பது நல்லது.


Click it and Unblock the Notifications