Home / Photos
மாதுளையில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ குணங்கள்.. ஆனால் இவங்க மட்டும் சாப்பிடவே கூடாதாம்? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
By Chandru
பழ வகைகளிலேயே அதிக சத்துக்கள் நிறைந்த பழம் மாதுளம் பழம். மாதுளை முத்துக்களை சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆன்டிஆக்சிடன்ட், வைட்டமின் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. மனித உடலுக்கு நன்மைபயக்கும் இந்த பழத்தை சிலர் மட்டும் சாப்பிடவே கூடாது என்று கூறுகின்றனர். யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? ஏன் சாப்பிடக்கூடாது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Share
தோல் அலர்ஜி இருப்பவர்கள் மாதுளை சாப்பிடுவதை நிறுத்திக்கொள்வது நல்லது. ஏனென்றால் அது அலர்ஜியை மேலும் அதிகப்படுத்திவிடும்.
2/5
Share
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். மாதுளம் பழத்தில் உள்ளது சத்துக்கள் இரத்த ஓட்டத்தை குறைக்கும் தன்மை உடையது. எனவே இரத்த அழுத்தம் தொடர்பான மருந்துகள் எடுப்பவர்கள் மாதுளம் பழத்தை தவிர்ப்பது நல்லது.
3/5
Share
அசிடிட்டி, வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் மாதுளம் பழத்தை எடுத்துக்கொள்ளவேண்டாம். அதன் குளிர்ச்சியான தன்மை செரிமான பிரச்னையை ஏற்படுத்தும்.
4/5
Share
அதேபோல் இதன் குளிர்ச்சி தன்மை சளி, இருமல் இருப்பவர்களுக்கு பிரச்சனையை அதிகப்படுத்தும்.
5/5
Share
மலச்சிக்கல் இருப்பவர்கள் மாதுளம் பழத்தை தவிர்ப்பது நல்லது. வாயு பிரச்சனை, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications